புதன், 16 பிப்ரவரி, 2022

மகாராஷ்டிரா என்பது இந்தியாவின் மாபெரும் பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையமாகும்.- திரு ராம்நாத் கோவிந்த்


 மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய தர்பார் மண்டபத்தை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்  தொடங்கி வைத்தார் (பிப்ரவரி 11, 2022). 

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மகாராஷ்டிரா ஆன்மீக பூமி என்பது போலவே, அநீதிக்கு எதிராக போராடும் வீரம் செறிந்த பூமியும் ஆகும்.  மகாராஷ்டிரா என்பது இந்தியாவின் மாபெரும் பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையமாகும்.  இந்த மாநிலம் திறமை மற்றும் இயற்கை அழகை கொண்டுள்ளது.  இத்தகைய சிறப்புகள் காரணமாக நான் மட்டுமின்றி இந்தியாவிலிருந்தும்,  வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மக்கள் மகாராஷ்டிராவுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருகின்றனர்.

ஆனால், இந்த முறை எனது பயணம் வெறுமையான அனுபவத்தை கொண்டுள்ளது.   ஒருவாரத்திற்கு முன் நான் நமது அன்புக்குரிய லதா தீதியை இழந்து விட்டோம்.   அவரைப் போன்ற மாபெரும் ஞானிகள் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே பிறக்கிறார்கள்.  லதா அவர்களின் இசை அமரத்துவம் வாய்ந்தது.  இசைப் பிரியர்கள் அனைவரையும் அது ஆகர்ஷிக்கும்.

ஜனநாயக நடைமுறையில் நல்ல நிர்வாகத்தின் மிக முக்கியமான அம்சம் வெளிப்படைத்தன்மையாகும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.  ஜனதா தர்பார் மூலம் அரசு அதிகாரிகள் மக்களுடன் தொடர்பு கொள்ளும் நடைமுறை பிரபலமாகி வருகிறது.  இந்த வகையில் புதிய கட்டமைப்பு கொண்ட இந்த தர்பார் மண்டபம்  புதிய இந்தியாவின், புதிய மகாராஷ்டிராவின், நமது துடிப்புமிக்க ஜனநாயகத்தின்  அடையாளமாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக