வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

குழந்தை உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.- திருமதி ஸ்மிருதி இரானி


குழந்தை உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், குழந்தைகளின் நலனை மனதில் கொண்டு, கவனிப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைப்படும் குழந்தைகள் விஷயத்தில் முடிவெடுக்க சிறார் நீதிச்சட்டம் 2015- (பிரிவுகள் 27-30)ன்படி குழந்தை நலக் குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.   தேசிய மற்றும் மாநில அளவில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க தேசிய / மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்

மத்திய நிதியுதவியுடன் கூடிய வத்சல்யா இயக்கத்தின் மூலம், குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற கல்வி, தொழிற்பயிற்சி, பொழுதுபோக்கு, சுகாதாரக் கவனிப்பு மற்றும் மனநல ஆலோசனைகள்  வழங்கப்பட்டு வருவதாகவும் திருமதி ஸ்மிருதி இரானி  தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக