வியாழன், 10 பிப்ரவரி, 2022

ரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், குடும்ப அட்டையை ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு நேரடியாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.- திரு. அஷ்வினி குமார் சவுபே


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக  பதில் அளித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் திரு. அஷ்வினி குமார் சவுபே கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

தொழில்நுட்பம் சார்ந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், குடும்ப அட்டையை ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு நேரடியாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஏனெனில் பயனாளிகள் தங்கள் உணவு தானியங்களை எந்த மின்னணு விற்பனை நிலையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளும் விருப்பத்தேர்வு இதில் உள்ளது. ஆகஸ்ட் 2019-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜனவரி 31, 2022 வரை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மொத்தம் சுமார் 56 கோடி பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக முறையின் செயல்பாடுகள் மதிப்பிற்குரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய புகழ் பெற்ற நிறுவனங்களின் மூலம் மதிப்பீடு செய்வதன் ஒரு பகுதியாக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படுவதை இத்திட்டம் மதிப்பாய்வு செய்தது.

2020-ம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், 31 ஜனவரி 2022 வரை 11,04,524 பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் இதன் கீழ் நடைபெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக