திங்கள், 7 பிப்ரவரி, 2022

எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நிலைத்தன்மைக்காக எரிசக்தியைப் பயன்படுத்துவதில் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.- திரு. ராமேஸ்வர் தெலி


 நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.

எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நிலைத்தன்மைக்காக எரிசக்தியைப் பயன்படுத்துவதில் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

இறக்குமதி ஆதாரங்களை பல்வகைப்படுத்துதல், மாற்று எரிபொருட்களை மேம்படுத்துதல், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரித்தல், மாற்று எரிசக்தி, சுத்திகரிப்பு செயல்முறைகளை மேம்படுத்துதல், எரிபொருள் திறன் நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு போன்றவை இவற்றில் அடங்கும்.

பல்வேறு நோக்கங்களுடன் உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது. 2018 தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின்படி இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாயிகளுக்கு மேம்பட்ட வருவாயை வழங்குதல், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக