ராமேஸ்வர் தெலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமேஸ்வர் தெலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 பிப்ரவரி, 2022

எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நிலைத்தன்மைக்காக எரிசக்தியைப் பயன்படுத்துவதில் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.- திரு. ராமேஸ்வர் தெலி


 நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.

எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நிலைத்தன்மைக்காக எரிசக்தியைப் பயன்படுத்துவதில் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

புதன், 11 ஆகஸ்ட், 2021

நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 29.11 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.


 நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 29.11 கோடியாக அதிகரித்துள்ளது என   மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி  கூறியுள்ளார்.

அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த  பதிலில் கூறியதாவது:

கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 16.62 கோடியாக இருந்த எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி 29.11 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களின் விவரம் இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 20 ஜூலை, 2021

இயற்கை எரிவாயு மற்றும் குழாய் மூலம் அனுப்பப்படும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.- பெட்ரோலியத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி


 இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக  மக்களவையில் பெட்ரோலியத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கூறினார்.

இயற்கை எரிவாயு மற்றும் குழாய் மூலம் அனுப்பப்படும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக சிட்டி கேஸ் விநியோகம்(சிஜிடி) உருவாக்கப்பட்டு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாக(சிஎன்ஜி) வாகனங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.