ஸ்மிருதி இரானி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்மிருதி இரானி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

குழந்தை உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.- திருமதி ஸ்மிருதி இரானி


குழந்தை உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

புதன், 1 செப்டம்பர், 2021

நாட்டின் ஊட்டசத்து தேவையை போக்க, பழங்கால ஆயுர்வேத அறிவை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பது பற்றி தெரிவிக்க வேண்டியது இப்போதைய தேவை.- திருமதி ஸ்மிருதி இரானி


 மாதம் முழுவதும் நடத்தப்படும் ‘போஷன்’ திட்ட நிகழ்ச்சிகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி  இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் ஊட்டசத்து தேவையை போக்க, பழங்கால ஆயுர்வேத அறிவை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பது பற்றி தெரிவிக்க வேண்டியது இப்போதைய தேவை என அவர் கூறினார்.  போஷன் திட்டத்தின் தொடக்கமாக, அகில இந்திய ஆயுர்வேத கழகத்தில் ஊட்டச்சத்து பூங்காவை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், ஆயுஷ்,  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் முன்ச்பரா மகேந்திரபாய் கலந்து கொண்டார். முருங்கை, நெல்லி ஆகிய மரக்கன்றுகளையும் இரு அமைச்சர்களும் நட்டனர். ஆயுஷ் அமைச்சகத்தின் உத்தரவின் கீழ், புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத கழகம், போஷன்  - 2021 கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளது.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

"ராஷ்டிரீய மகிளா கோஷ்" நிதி உதவி மூலமாக பெண்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகை செய்வதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.- திருமதி.ஸ்மிருதி இரானி


 ராஷ்டிரீய மகிளா கோஷ் 1993 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இது தேசிய அளவிலான தன்னாட்சி அமைப்பு. இது பெண்களுக்கு, குறிப்பாக ஊரகப் பகுதியில் உள்ள, அமைப்புசாரா தொழில்களில் பணியாற்றும் பெண்களுக்கு மானிய விலையில், அடமானம் இல்லாமல் இலவச குறு-நிதி சேவையை வழங்குகிறது. ராஷ்டிரீய மகிளா திட்டமானது, நிதியை இடைநிலையில் உள்ள குறுநிதி நிறுவனங்களுக்கு வழங்கி, பின்னர் அவை பெண்களின் தொழில் முனைவு நடவடிக்கைகளுக்கு நிதி சேவை வழங்கும் வகையில் செயல்பட்டது.

செவ்வாய், 22 ஜூன், 2021

உலக சந்தைக்கு தரம் வாய்ந்த புதிய வகை பொம்மைகளை உருவாக்குவதில் (Toycathon)டாய்கேத்தான் கவனம் செலுத்துகிறது. - திருமதி. ஸ்மிருதி இரானி


(Toycathon) டாய்கேத்தான் 2021 இறுதி போட்டியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சஞ்ஜே தோத்ரே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில் அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த டாய்கேத்தான் 2021 போட்டியை, கல்வித்துறை அமைச்சகம் ஐந்து இதர அமைச்சகங்களுடன் இணைந்து நடத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, உள்ளூர் மலிவு விலை பொருட்களை பயன்படுத்தி இந்திய மற்றும் உலக சந்தைக்கு தரம் வாய்ந்த புதிய வகை பொம்மைகளை உருவாக்குவதில் டாய்கேத்தான் கவனம் செலுத்துகிறது.

செவ்வாய், 11 மே, 2021

இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கத்துடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி கூறியுள்ளார்.


 நாடு முழுவதும் உள்ள அரசின் குழந்தை பாதுகாப்பு மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகம், இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கத்துடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி கூறியுள்ளார்.

“இது, குழந்தை பாதுகாப்பு சேவைகளுக்கான திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கும் கூடுதலானதாகும்”, என்று அமைச்சர் தமது சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சனி, 13 பிப்ரவரி, 2021

ஜவுளித்துறையில் ஏற்றுமதி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க ரூ.6,000 கோடி மதிப்பிலான சிறப்பு நிதி உதவி திட்டத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.- திருமதி. ஸ்மிருதி இரானி


 மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

* கொவிட் தொற்று காலத்தில் பிபிஇ உடைகள், என்-95 முகக் கவசங்கள்  உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. 

கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 6 கோடி பிபிஇ உடைகள், 15 கோடி என்-95 முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டன. பிபிஇ உடைகள் தயாரிப்புக்கு 1100 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.