வியாழன், 25 நவம்பர், 2021

கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் உணர்வை ஏற்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


எச்பிடியு போன்ற கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத்  கோவிந்த் தெரிவித்துள்ளார். கான்பூரில் உள்ள ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (எச்பிடியு) நூற்றாண்டு விழாவில் அன்று (நவம்பர் 25, 2021) அவர் உரையாற்றினார்.

எண்ணெய், வண்ணப்பூச்சு, நெகிழி, உணவுத் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் இதன் பங்களிப்புக்காக எச்பிடியு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். 20-ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து இந்தியாவில் உருவாகியிருக்கும் தொழில் துறை மேம்பாட்டோடு இணைந்தது என்பது இந்த நிறுவனத்தின் புகழ்மிக்க வரலாறாகும்.  'கிழக்குப்பகுதியின் மான்செஸ்டர்’ ‘உலகின் தோல் நரகம்’, 'தொழில் துறை குவி மையம்’ என்று புகழப்படும் கான்பூரின் பின்னணியில்  தொழில்நுட்பம்  மற்றும் மனித வளத்தை  வழங்கியதில் எச்பிடியு முக்கியமானதாக விளங்கியுள்ளது.

இந்தியாவில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்திய குடியரசுத் தலைவர், புதிய கண்டுபிடிப்புக்கும், புதிய தொழில்நுட்பத்திற்கும், முன்னுரிமை வழங்கும் நாடுகள் மட்டுமே உலகில் முன்னணியில் இருப்பதாகவும், தொடர்ந்து தங்களின் குடிமக்களை எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறன் உள்ளவர்களாக மாற்றுவதாகவும் கூறினார்.  நமது நாடு தொழில்நுட்பத்துறையில் தமது நம்பகத்தன்மையை அதிகரித்துக் கொண்டுள்ளது என்றாலும், நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நெடியது என்று அவர் குறிப்பிட்டார்.   இந்தச் சூழலில் எச்பிடியு போன்ற கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கல்வியில் மாணவியரின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருக்கிறது என்று கூறிய திரு ராம் நாத் கோவிந்த், தொழில்நுட்பக் கல்வியில் மேலும் மேலும் கூடுதலாக மாணவியரைப் பயிலச் செய்வது காலத்தின் தேவையாகும் என்றும் இது மகளிருக்கு அதிகாரம்  அளித்தலை அதிகப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக