சனி, 20 நவம்பர், 2021

ஆயுஷ் மருத்துவ முறையை வடகிழக்கில் பிரபலப்படுத்துவதற்கான முக்கியத் திட்டங்களை மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் அறிவித்தார்

 


ஆயுஷ் மருத்துவத் துறையை வடகிழக்கில் மேம்படுத்துவதற்கான முக்கியத் திட்டங்களை மத்திய ஆயுஷ்துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் அருணாச்சலப் பிரதேசத்தில் அறிவித்தார்.

பாசிகாட்டில் 30 இடங்களுடன் கொண்ட ஒரு புதிய ஆயுர்வேதக் கல்லூரி, 60 படுக்கைகளுடன் கூடிய புதிய ஆயுர்வேத மருத்துவமனைஆயுர்வேத மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சிக்கான வடகிழக்கு நிறுவனத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ரூ 53.72 கோடி முதலீடு, 86 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பாசிகாட்டில் இருக்கும் ஆயுர்வேத மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சிக்கான வடகிழக்கு நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்ஆண்கள் விடுதிபெண்கள் விடுதி மற்றும் விளையாட்டு வளாகமும் வரும் காலங்களில் கட்டப்படும் என்றார்.

நாட்டுப்புற மருத்துவம் என்பது பாரம்பரிய சிகிச்சை முறைகள் மற்றும் நம்பிக்கைகளின் கலவையாகும். அறிவியல் வழியில் பாதுகாக்கப்படாத நாட்டுப்புற மருத்துவத்தின் வலுவான கலாச்சாரம் வடகிழக்கில் நம்மிடம் உள்ளது. இயற்கை அன்னை நமக்கு வழங்கிய வேத காலத்தின் இந்த அற்புதமான மருத்துவப் பரிசைப் பாதுகாப்பதற்கும் செழுமைப்படுத்துவதற்கும் நாங்கள் இப்போது பாடுபடுகிறோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர், “மருத்துவமனையுடன் புதிய ஆயுர்வேதக் கல்லூரி ஒன்று இங்கு நிறுவப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளமான பாரம்பரிய அறிவைப் பாதுகாக்க மற்றும் அதை மேலும் மேம்படுத்த நாங்கள் எடுத்து வரும் முயற்சியை இது மேலும் வலுப்படுத்தப் போகிறது,” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக