வியாழன், 11 நவம்பர், 2021

தமிழக விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கான காலத்தை நீட்டிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.- ஜி.கே.வாசன்



தமிழக அரசு விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 ஆம் தேதி கடைசி தேதி என்பதை மழைக்கால சிரமத்தை கவனத்தில் கொண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை பயிர்காப்பீடு செய்ய கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கான காலத்தை நீட்டிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இப்பருவத்திற்கான பயிர் காப்பீட்டு திட்டத்தில் ராபி பருவ வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் நவம்பர் 15 ஆம் தேதி. அதாவது நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பாசிப் பயிறு, உளுந்து பயிர் மற்றும் சம்பா நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்தால் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும்.

தற்போது பெய்து வரும் பருவமழை, கன மழை ஆகியவற்றால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அதிக நஷ்டத்தில் இருக்கின்ற காரணத்தால் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மழை பெய்யும் இவ்வேளையில் விவசாயிகள் பயிர் காப்பீடு சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து அடங்கல் வாங்குவதும் சிரமமானது.

இந்நிலையில் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யாத விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை 2021 நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு வேளாண்துறை அறிவித்தது.

தற்போதைய சூழலில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு சாதகமானதாக இருக்காது. 

தமிழகத்தில் கனமழை பெய்யும் இக்காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

எனவே தமிழக அரசு விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 ஆம் தேதி கடைசி தேதி என்பதை மழைக்கால சிரமத்தை கவனத்தில் கொண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை பயிர்காப்பீடு செய்ய கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக