ஞாயிறு, 21 நவம்பர், 2021

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் காதி அரங்கை மத்திய அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி பார்வையிட்டார்


 புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2021-ல் காதி இந்தியா அரங்கை மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சார இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி சனிக்கிழமையன்று பார்வையிட்டார்.

காதி இந்தியா அரங்கை பார்வையிட்ட இணை அமைச்சர், அங்கிருந்த ராட்டையில் நூல் நூற்றார். மின்சார சக்கரத்தில் களிமண் பானைகள் செய்தல், கையால் காகிதம் செய்தல், கையால் செய்யப்பட்ட காலணிகள், எண்ணெய் உற்பத்தி உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.

சுயவேலைவாய்ப்பை உருவாக்கி கிராமப்புற பொருளாதாரங்களை வலுப்படுத்துவதில் காதி மற்றும் கிராமப்புறத் தொழில்கள் வாரியத்தின் முயற்சிகளை திருமதி லேகி பாராட்டினார்.

காதியை ஊக்குவிப்பதன் மூலமும், ஆதரிப்பதன் மூலமும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார். பல்வேறு காதி அரங்குகளில் இருந்து பட்டுப் புடவைகள், தேன், வினிகர் மற்றும் மர பொம்மைகளை அமைச்சர் வாங்கினார். மரத்தாலான பொம்மைகளுக்கும் மொத்தமாக அவர் ஆர்டர் செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக