வெள்ளி, 19 நவம்பர், 2021

காந்திநகர் கிஃப்ட் சிட்டியில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாளை மத்திய அரசின் செயலர்கள் குழுவுக்கு தலைமையேற்று விவாதிக்கிறார்

 


மத்திய நிதி மற்றும் பெருவணிக நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2021 நவம்பர் 20-ம் தேதி காந்திநகரின் கிஃப்ட் சிட்டியில், மத்திய நிதி மற்றும் பெருவணிக நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் ஏழு செயலர்களைக் கொண்ட குழுவுக்கு தலைமையேற்று, இந்தியாவின் முதலாவது சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தின்( ஐஎப்எஸ்சி ) வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான விஷயங்கள் பற்றி விவாதிக்கிறார். மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் திரு பங்கஜ் சவுத்ரி, டாக்டர் பகவத் கிருஷ்ணாராவ் கரத் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்பார்கள்

இந்தியாவுக்குள், இந்திய பெருநிறுவனங்களுக்கான உலக நிதிச் சேவைகளுக்கு வாயிலாக செயல்படும் கிஃப்ட்- ஐஎப்எஸ்சி-யின் பங்கு, இந்தியாவுக்கு உலக நிதி வர்த்தகத்தை ஈர்ப்பது, ஃபின்டெக்-கை உலக மையமாக வளர்ப்பது ஆகியவை குறித்து விவாதம் கவனத்தில் கொள்ளும். 

கிஃப்ட் சிட்டியில் உள்ள கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிடும் மத்திய நிதியமைச்சர், ஐஎப்எஸ்சி-யில் கலந்து கொள்ளும் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடுவார். இந்தப்பயணம், கிஃப்ட்- ஐஎப்எஸ்சி-யை இந்தியாவின் பிரதானமான நிதிச் சேவைகள் மையமாகவும், உலக நிதி வரவும், இந்தியாவிலிருந்து செல்லவும் வாயிலாக மாற்றுவதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை பறைசாற்றும். தற்சார்பு இந்தியா என்னும் தொலைநோக்குடன் உருவாக்கப்பட்ட கிஃப்ட்- ஐஎப்எஸ்சி-யின் விரைவான வளர்ச்சிக்கான உத்திகளையும், யோசனைகளையும் அறிந்து கொள்ள விவாதம் உதவும்

உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த நிதிச் சேவை ஒழுங்குமுறை அமைப்பை கிஃப்ட்- ஐஎப்எஸ்சி –க்கு வழங்க, மத்திய அரசு, குஜராத் மாநில அரசு, சர்வதேச நிதிச் சேவைகள் மைய ஆணையம் ( ஐஎப்எஸ்சிஏ) ஆகியவை இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக