ஞாயிறு, 7 நவம்பர், 2021

"உள்நாட்டு உப்பு நீர் மீன் வளர்ப்பை ஊக்குவித்தல்" குறித்த கருத்தரங்கை மீன்வளத்துறை நடத்தியது.


"உள்நாட்டு உப்பு நீர் மீன் வளர்ப்பை ஊக்குவித்தல்" குறித்த கருத்தரங்கை இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் மீன்வளத்துறை 2021 நவம்பர் 5 அன்று நடத்தியது.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வரும் விடுதலையின் அமிர்த மகோற்சவத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் கருத்தரங்கு வரிசையில் இது எட்டாவது ஆகும். மத்திய மீன்வளத் துறையின் செயலாளர் திரு ஜதீந்திரநாத் ஸ்வைன் கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார்.

மத்திய மீன்வளத்துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகள், ஐசிஏஆர் மீன்வள நிறுவனங்கள், கால்நடை மற்றும் மீன்வள பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை சேர்ந்த ஆசிரியர்கள், தொழில் முனைவோர், மீன் விவசாயிகள் மீன் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் மீன்வளத்துறையை சேர்ந்த இதர நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மீன்வள மேம்பாட்டு ஆணையர் திரு ஐ ஏ சித்திக்கியின் வரவேற்புரையுடன் தொடங்கிய கருத்தரங்கில் பேசிய திரு ஜதீந்திரநாத், மீன்வளத் துறையின் வளர்ச்சி குறித்தும் நாட்டில் கிடைக்கும் மீன் வளங்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது குறித்தும் பேசினார்.

உப்புநீர் பாதித்த பகுதிகளில் மீன் வளர்ப்பில் ஈடுபடுவது குறித்த முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், இப்பகுதிகளில் மீன் வளர்ப்புக்கு பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆதரவு குறித்து விளக்கினார். தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் திறன் வளர்த்தலின் ஆதரவோடு பயனில்லாத நிலத்தை வளம் கொழிக்கும் நிலமாக மாற்றலாம் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக