திங்கள், 22 நவம்பர், 2021

அய்.அய்.டி. கல்வி நிறுவனப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு கண்டனத்திற்குரியது!- கி.வீரமணி



அய்.அய்.டி. கல்வி நிறுவனப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிப்பு கண்டனத்திற்குரியது!- கி.வீரமணி

சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் நேற்று (20.11.2021) நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து - ‘‘நீராரும் கடலுடுத்த’’ என்ற மொழி வாழ்த்துப் பாடாமல் புறக்கணித்துள்ளனர்.
வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் மொழி வாழ்த்துப் பாடப் பட வேண்டும் (அதற்கு அவையினர் எழுந்து நிற்க வேண்டும் என்பதும் மரபு) என்ற தமிழ்நாடு அரசு ஆணையை அலட்சியப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகும்!

முதல் தடவையல்ல இப்படி தமிழ் வாழ்த்தைப் புறக்கணிப்பது; (சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது) முன்பும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அங்கே நடந்தேறியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணையைப் பின்பற்றவோ-  மதிக்கவோ அய்.அய்.டி. என்ற உயர் ஜாதி பார்ப்பன ஆதிக்க வல்லாண்மை தயாராக இல்லை என்பது ஏற்கத்தக்கதுதானா?

தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும் உரிய கண்டனத்தைப் பதிவு செய்வது முக்கியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக