புதன், 24 நவம்பர், 2021

பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை (PMGKAY) மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்.


 2021 ஜூன் 7 அன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையின் தொடர்ச்சியாகவும், கொவிட்-19-க்கான பொருளாதார எதிர்வினையின் ஒரு பகுதியாகவும், பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை (PMGKAY- பகுதி V) மேலும் நான்கு மாதங்களுக்கு, அதாவது 2021 டிசம்பர் முதல் 2022 மார்ச் வரை, நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முடிவின் படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (அந்த்யோதயா உணவு திட்டம் மற்றும் முன்னுரிமை குடும்பங்கள்) கீழ் வரும் அனைத்துப் பயனாளிகளுக்கும், நேரடிப் பலன் பரிமாற்றத்தின் கீழ் உள்ளவர்கள் உட்பட, ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கல் இலவசமாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் முறையே ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரையிலும், ஜூலை முதல் நவம்பர் 2020 வரையிலும் செயல்படுத்தப்பட்டன. திட்டத்தின் மூன்றாம் கட்டமானது மே முதல் ஜூன் 2021 வரை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நான்காம் தற்போது ஜூலை-நவம்பர், 2021 மாதங்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான ஐந்தாவது கட்டத்திற்கான கூடுதல் உணவு மானியமாக ரூ. 53344.52 கோடி

செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்டத்திற்கான உணவு தானியங்களின் மொத்த வெளியீடு சுமார் 163 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும்.

கொவிட்-19 காரணமாக கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத வகையிலான பொருளாதார சீர்குலைவுகளை அடுத்து, மார்ச் 2020-ல் விலையில்லா உணவு தானியங்களை (அரிசி/கோதுமை) விநியோகிப்பதாக அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.

80 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ என்ற அளவில், வழக்கமான மாதாந்திர உணவு தானியங்களுக்கு மேல், வழங்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக, பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்ட கட்டம் 1 முதல் 5 வரை அரசுக்கு சுமார் ரூ.2.60 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக