வெள்ளி, 26 நவம்பர், 2021

நாட்டின் நாடாளுமன்றங்கள் ’உரையாடல் மற்றும் விவாதம்' மூலம் வழிநடத்தப்பட வேண்டும், தொடர்ச்சியான இடையூறுகள் மூலம் செயலிழக்க செய்யக் கூடாது.- திரு எம். வெங்கையா நாயுடு


 குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு எம். வெங்கையா நாயுடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடு ஜனநாயகக் குடியரசாக இருக்க வேண்டும் என்ற நிலையில், நாட்டின் நாடாளுமன்றங்கள் ’உரையாடல் மற்றும் விவாதம்' மூலம் வழிநடத்தப்பட வேண்டும், தொடர்ச்சியான இடையூறுகள் மூலம் செயலிழக்க செய்யக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையின் உற்பத்தித்திறனில் நிலையான சரிவு குறித்து அவர் கவலை தெரிவித்தார். திரு நாயுடு இன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் 'அரசியலமைப்பு தின' நிகழ்ச்சியில் பேசும் போது, அரசியலமைப்பின் ஆன்மா, விதிகள் மற்றும் உண்மையான நடைமுறை ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு குறித்து விரிவாக விளக்கினார்.

அரசியலமைப்பு என்பது மதிப்புகள், கருத்துக்கள் மற்றும் லட்சியங்களின் அறிக்கை என்று கூறி, சகோதரத்துவத்தின் உண்மையான உணர்வில் அனைவருக்கும் நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்த முயல்கிறது, நாட்டின் சட்டம் இந்தியா ஒரு சமூகமாக வெளிப்படும் வகையில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்த முயன்றது. சர்தார் படேல் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார், "... நீண்ட காலமாக, இந்த நாட்டில் பெரும்பான்மையான சிறுபான்மை சமூகம் உள்ளது என்பதுடன், இந்தியாவில் ஒரே சமூகம் மட்டுமே உள்ளது என்பதை மறந்துவிடுவது அனைவருக்கும் நன்மை பயக்கும்". அனைத்து குடிமக்களும் பங்குதாரர்களும் தேசத்தின் மீது ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து இடையூறுகள் காரணமாக செயல்படாத நாடாளுமன்றங்கள் குறித்து கவலை தெரிவித்த திரு நாயுடு, கடந்த பொதுத் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டில் அவையின் உற்பத்தித்திறன் 35.75% ஆக மிகக் குறைவாகவும், மேலும் கடந்த 254வது அமர்வு 29.60% ஆகவும் சரிந்துள்ளதாகவும் தெரிவித்தார். 1979 முதல் 1994 வரையிலான 16 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் ஆண்டு உற்பத்தித்திறன் 100% அதிகமாக இருந்த நிலையில், அடுத்த 26 ஆண்டுகளில் 1998 மற்றும் 2009ல் இரண்டு முறை மட்டுமே நூறு சதமாக இருந்தது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றங்கள் செயலிழந்து போவது குறித்து சிந்திக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் துணை குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இந்திய அரசியலமைப்பு நமக்கு அளித்துள்ள நெறி முறைகளையும் அதன் புனிதம் குறையாமல் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார், இதனால் நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதுடன் சுஷிக்ஷித் பாரத், சுரக்ஷித் பாரத், ஸ்வஸ்தா பாரத், ஆத்மநிர்பர் பாரத் என இறுதியில் ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத் என ஒருங்கிணைவதன் மூலம் பிற நாடுகளின் கூட்டமைப்பில் அதன் சரியான இடத்தை பெற முடியும்.

அரசியலமைப்புச் சட்டம் 'உரையாடல் மற்றும் விவாதம் முக்கியமானது என்றும் சட்டமன்றங்களில் ஏற்படும் இடையூறுகள் நமது சட்டத்தின் புனிதத்திற்கு இடையூறாக உள்ளது என்றும் கூறினார்

நாடாளுமன்றத்தின் உற்பத்தித்திறன் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாக மாநிலங்களவைத் தலைவர் தெரிவித்தார். தேசிய ஒற்றுமையை உருவாக்குவது ஒரு முக்கிய அரசியலமைப்பு மதிப்பு என்பதுடன் ஒரே இந்திய சமூகமாக ஒருங்கிணைவது காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக