வெங்கையா நாயுடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெங்கையா நாயுடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜூலை, 2022

ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் – குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு


 ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய  உலகளாவிய விழுமியங்களை இந்திய நாகரிகம், நிலைநிறுத்துகிறது என்று குடியரசு துணைத்தலைவர்  திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.  இந்தப் பழமையான மதிப்புகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் என அவர் கூறினார்.

குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,  “பாடு, நடனமாடு,  பிரார்த்தனை செய் - ஸ்ரீல பிரபுபாதாவின் உத்வேகம் தரும் கதை” என்ற புத்தகத்தை வெளியிட்ட பின்னர் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், சுவாமி பிரபுபாதா போன்ற சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து உத்வேகம் பெறவும், அவர்களின் குணங்களை இளைஞர்கள் உள்வாங்கவும் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம் எனக்கூறிய அவர்,  "நீங்கள் எப்போதும் சாதி, பாலினம், மதம் மற்றும் பிராந்தியம் என்ற குறுகிய கருத்துக்களுக்கு அப்பால் உயர்ந்து சமுதாயத்தில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கொண்டுவர உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதரின் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை  டாக்டர் ஹிந்தோல் சென்குப்தா எழுதியுள்ளார்.

வெள்ளி, 15 ஜூலை, 2022

ரத்த சோகை போன்ற மரபணு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை வழிமுறைகளின் முக்கியத்துவத்தை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

 


தலசீமியா மற்றும் அரிவாள் வடிவம் பெற்ற சிவப்பணுவால் உருவாகும் ரத்த சோகை போன்ற மரபணு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை வழிமுறைகளின் முக்கியத்துவத்தை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். மரபணு சார்ந்த நோய்களை துவக்கத்திலேயே கண்டறிந்து, அவற்றைக் குணப்படுத்துவதற்கு, குழந்தைகளிடையே மிகப்பெரிய அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ஞாயிறு, 10 ஜூலை, 2022

இந்திய உலகக் கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள, அவர் சமஸ்கிருதத்தை கற்பது அவசியம்.- திரு.எம்.வெங்கையா நாயுடு


 சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்படுவதுடன்,  இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீள் உருவாக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டுமென, குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.   “அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசாங்க உதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும், ஒரு மொழியை பாதுகாத்துவிட முடியாது“  என்றும் அவர் கூறியுள்ளார்.  

சனி, 9 ஜூலை, 2022

நாட்டில் பெண்களின் விடுதலைக்கு இடையூறாக உள்ள தடைகளை நீக்க வேண்டும் - குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு


 நாட்டில் பெண்களின் விடுதலைக்கு இடையூறாக உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். நமது நாகரிக நெறிமுறைகள் பல்வேறு துறைகளில் பெண்களின் சம பங்களிப்பை ஊக்குவித்தாலும், பல துறைகளில் பெண்கள் தங்கள் முழுத் திறனையும் இன்னும் உணரவில்லை என்று அவர் கூறினார்.

இன்று பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டங்களைத் தொடக்கிவைத்து உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், அரசுகளின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் பெண்களின் கல்விக்கு அதிக ஊக்குவிப்பு தேவை என்று கூறினார். வாய்ப்பு கிடைக்கும்போது, பெண்கள் எல்லா துறைகளிலும் வென்று நிரூபித்துள்ளனர் என்றார் அவர்.

செவ்வாய், 21 ஜூன், 2022

தொன்மை வாய்ந்த அறிவியலான யோகா உலகத்திற்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற பரிசு - குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு


 மத்திய சுற்றுலா அமைச்சகம் செகந்திராபாத் அணிவகுப்பு மரியாதைக்கு ஏற்பாடு செய்திருந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு நூற்றுக்கணக்கானோருடன் கலந்து கொண்டார். யோகா பயிற்சி மேற்கொண்ட குடியரசு துணைத்தலைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே உரையாற்றினார்.

தொன்மை வாய்ந்த அறிவியலான யோகா உலகத்திற்கு இந்தியா வழங்கிய விலைமதிப்பில்லாத பரிசு என்று கூறிய திரு நாயுடு,  ஒவ்வொருவரும் யோகாவை தங்களது அன்றாட பயிற்சியாக மேற்கொண்டு அதன் பலன்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  நல்வாழ்வுக்கு தீர்வாக யோகா குறித்து மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.

வியாழன், 16 ஜூன், 2022

கத்தாரில் வசிக்கும் 7.80 லட்சம் இந்திய சமூகத்தினர் இரு நாடுகளுக்கு இடையேயான பாலமாக திகழ்கிறார்கள்.- திரு.வெங்கையா நாயுடு


கத்தாரில் வசிக்கும் 7.80 லட்சம்  இந்திய சமூகத்தினர் இரு நாடுகளுக்கு இடையேயான பாலமாக திகழ்கிறார்கள். இந்தியா மற்றும் கத்தார் இடையேயான உறவு வலுவடைந்து வருகிறது. கொவிட்-19 சவாலுக்கு இடையேயும் கடந்த ஆண்டு சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இருநாட்டு வர்த்தகத்தை நாம் பதிவு செய்து சாதனை படைத்தோம். இந்தியா, கத்தாரின் 3-வது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. மார்ச் 2020 முதல் இந்தியாவில் கத்தாரின் அந்நிய நேரடி முதலீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு, ராணுவம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. கத்தார் பல்கலைக்கழகத்தில் இந்திய அமர்வை நிறுவவும், விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தில் ஒத்துழைப்பை அளிக்கவும் நேற்று நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். இரு நாடுகளின் புதிய கண்டுபிடிப்புகள் சூழலியலை இணைப்பதற்காக ஓர் புதிய நிறுவனங்களின் பாலத்தை அறிமுகப்படுத்தினோம்.

புதன், 15 ஜூன், 2022

நாகரீகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை.- குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு


 மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு உலக அமைதி மிகவும் முக்கியமானது என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு, “நாகரீகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை” என்று கூறினார்.

குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவனத்தின் மாணவர்களுடன் கலந்துரையாடிய திரு.நாயுடு, இந்தியர்கள் தங்களது கலாச்சாரம் குறித்து பெருமைப்படுவதுடன், அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு மதிப்பளிப்பவர்கள் என்று கூறினார்.  உலகமே ஒரே குடும்பம் என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 7 ஜூன், 2022

இந்திய வம்சா வழியினரின் வெற்றி என்பது இந்தியா மற்றும் இந்தியர்கள் பற்றிய உலகின் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது. - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு


 காபோன், செனகல், கத்தார் நாடுகளில் வெற்றிகரமான 9 நாள் பயணத்தை நிறைவு செய்த குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு இன்று மாலை இந்தியா திரும்பினார். காபோன், செனகல் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த உயர்நிலை தலைவரின் முதலாவது பயணம் இதுவாகும். அதேபோல் இந்திய குடியரசு துணைத்தலைவர் கத்தார் நாட்டிற்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இதுவாகும். இந்த நாடுகளின் தலைநகரங்களான லிப்ரேவில்லே, டாக்கர், தோகா ஆகியவற்றில் திரு நாயுடுவை கவுரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிகளில்  அவர் அந்நாடுகளின் வணிகத்துறையினர் மற்றும் இந்திய சமூகத்தினருடன்  கலந்துரையாடினார்.

வியாழன், 19 மே, 2022

உலக நாடுகளி்ல் விஸ்வகுரு என்ற நிலையை இந்தியா மீண்டும் பெறுவதை உறுதி செய்ய நாம் அனைவரும் கூட்டாக பாடுபடவேண்டும். - திரு எம் வெங்கய்யா நாயுடு


 சமூகத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கும் தேவைப்படும் பிரிவினருக்கும் கல்வியைக் கொண்டு செல்லும் தேசத்தின் முயற்சியில் இணையுமாறு மாணவர்களைக் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார் நீலகிரியின் லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய அவர் நாட்டின் கல்வி வரைப்படத்தை மாற்றவும் கூடுதல் சமத்துவம் உள்ளதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கும்  அரசு அனைத்து முயற்சிகளையும் செய்வதை சுட்டிக்காட்டினார்.

கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்துவதன் தேவையை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.


 கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்துவதன் தேவையை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆளுமைகளை ஈடுபடுத்தி உள்ளுர் மொழிகளில் ஊடக பிரச்சாரத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

சனி, 14 மே, 2022

வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டியது அவசியம். - குடியரசு துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு


 நீண்ட காலத்திற்கு விவசாய உற்பத்தியில் கணிசமான லாபத்தை அடைய, நாட்டில் விவசாய ஆராய்ச்சியின் தரம் மற்றும் திறனை மேம்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர்  திரு. எம். வெங்கையா நாயுடு  அழைப்பு விடுத்துள்ளார். விரிவாக்க நடவடிக்கைகள் இல்லாமல் எந்த ஒரு முன்னேறிய நாடும் விவசாய உற்பத்தியை மேம்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட, திரு நாயுடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினத்தை அதிகரிக்க பரிந்துரைத்தார். இது நமது விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்று அவர் கூறினார்.

 ‘விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ற, லாபகரமானதாகவும், நிலையானதாகவும் மாற்ற வேண்டும் எனக் கூறிய திரு நாயுடு,  ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விவசாய ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் விஞ்ஞானிகளின் ஒவ்வொரு முயற்சிக்கும் அழைப்பு விடுத்தார்.

திங்கள், 18 ஏப்ரல், 2022

மதிப்பு அடிப்படையிலான நெறிமுறை சார்ந்த அரசியலுக்கான தேவையைக் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்


 இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் மதிப்பு அடிப்படையிலான நெறிமுறை சார்ந்த அரசியலுக்கான தேவையைக் குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ண மாவட்ட பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் மறைந்த திரு.பின்னாமநேனி கோடீஸ்வரராவின் உருவச்சிலையை மசூலிப்பட்டினத்தில் திறந்து வைத்து பேசிய அவர், பொது வாழ்க்கையில் தரம் தாழ்ந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அரசியல் எதிர்ப்பாளர்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதை நிறுத்த வேண்டுமென்று திரு.நாயுடு வலியுறுத்தினார். முக்கியமான தேச விஷயங்களின் மீது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பொதுக் கருத்தை உருவாக்குவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். வளர்ந்து வரும் அரசியல்வாதிகள் பல்வேறு விஷயங்கள் மீது கோட்பாட்டு அடிப்படையிலான நிலையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சனி, 9 ஏப்ரல், 2022

குழந்தைகள் விரும்பும் கலைகளைக் கற்க பள்ளிகளும், பெற்றோரும் ஊக்குவிக்க வேண்டும்.- திரு எம்.வெங்கையா நாயுடு


 இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்க, குழந்தைகள் தேர்வு செய்யும் எந்தவித கலையையும் கற்பதற்கு அவர்களைப் பெற்றோரும், பள்ளிகளும் ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

62-வது தேசிய கண்காட்சி கலை விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, சங்கீத நாடக அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி விருதுகளை வழங்கி குடியரசு துணைத்தலைவர் உரையாற்றினார்.

மேல்நாட்டு கலாச்சாரம் காரணமாக நமது பாரம்பரியமான நாட்டுப்புறக் கலைகள் மறைந்து வருவதாக குடியரசு துணைத்தலைவர் கூறினார். இத்தகைய கலைகளுக்கு அரசுகளும், சமுதாயமும் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

புதன், 23 மார்ச், 2022

நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை எட்டுவதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதால், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இதில் பெரும் பங்கு வகிக்க வேண்டும்.- திரு எம். வெங்கைய நாயுடு


 நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை எட்டுவதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதால், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இதில் பெரும் பங்கு வகிக்க வேண்டுமென குடியரசுத் துணைத்தலைவர் திரு எம். வெங்கைய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியப் பல்கலைகழகங்கள் சங்கத்தின் வருடாந்தரக் கூட்டத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்து, ‘உயர்கல்வி நிறுவனங்கள் வாயிலாக நீடித்த இலக்கை அடைதல்’ பற்றிய தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய திரு நாயுடு, தொடக்க, இடைநிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடைவதற்கான செயல் திட்டங்களை உணர்வுப்பூர்வமாக பின்பற்ற வேண்டும் என்றார்.

வெள்ளி, 11 மார்ச், 2022

பாரம்பரிய அறிவாற்றல் முறைகளில் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.- குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு

 வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்கள், அடிக்கடி கூடுவதுடன், அதிக நாட்களுக்கும் நடைபெற வேண்டுமென்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். அப்போது தான் மக்கள் நலம் சார்ந்த விஷயங்களை விவாதிக்கவும், சட்டங்களை போதிய கால அவகாசத்துடன் நிறைவேற்றவும், நிர்வாகத்தின் பொறுப்புடமையை உறுதி செய்யவும் முடியுமென்றும் அவர் கூறியுள்ளார்.

 மிசோரம் சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், சட்டமன்ற கூட்டத் தொடர்கள், நீண்ட அவகாசத்தில் திட்டமிடப்பட்டு கூட்டப்படவேண்டுமென்றும், அப்போது தான் சட்டங்களை இயற்றவும், விவாதிக்கவும் போதிய அவகாசம் கிடைக்குமென்றும் கூறினார். சட்டமன்றங்களை அதிக நாட்களுக்கு கூட்டி ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

உள்ளூர் பிணைப்புகளை ஏற்படுத்தி, மண்டலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு புதுமையான முறையில் தீர்வு காண பல்கலைக்கழகங்கள் முன் வரவேண்டும். - திரு எம் வெங்கய்யா நாயுடு


 இயற்கை விவசாயம் மற்றும் மருத்துவமுறைகள் போன்ற பாரம்பரிய அறிவாற்றல் முறைகளில், அறிவியல் ஆராய்ச்சிகளை  ஊக்கப்படுத்துவதுடன், ‘நமது அறிவுசார் தலைமையிடத்தை மீண்டும் அடைய’ முறையான வழியில் முயற்சிக்குமாறு  பல்கலைக்கழகங்களை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

மிசோரம் மற்றும் சிக்கிமில் நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவர், காங்டாக்கில் அன்று (11.03.2022)  கஞ்சென்சோங்கா, மாநில  பல்கலைக்கழகத்திற்கு  அன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சிக்கிம் மாநிலம் இயற்கை விவசாயத்தில் முன்னோடியாக திகழ்வதற்கும், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தொழில்பயிற்சியை ஒரு பாடமாக வைத்திருப்பதற்கும் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், நீடித்த வளர்ச்சியில் கவனம் செலுத்தும் விதமாக தொடக்க பள்ளிகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்தியிருப்பதையும் அவர் பாராட்டினார்.

செவ்வாய், 8 மார்ச், 2022

கல்வியின் தரத்தையும் எளிதில் கிடைப்பதையும் விரிவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குக் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.


 கல்வியின் தரத்தையும் எளிதில் கிடைப்பதையும் விரிவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குக் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். அறிவின் பரிமாற்றத்திற்கு  பெருந்தொற்று காலம் எவ்வாறு புதிய வழிகளைத் திறந்துது என்பது பற்றி குறிப்பிட்ட திரு நாயுடு, ‘டிஜிட்டல் கருவிகள், கற்றலுக்கும், கலந்துரையாடலுக்கும் கூடுதலாக பயன்படுத்தப்பட்டன’ என்றார். தொழில்நுட்பத்தில்  புதிய வாய்ப்புகளைக் கண்டறியும் அதே சமயம், டிஜிட்டல் முறையில், அதிகரித்து வரும் இடைவெளியையும் சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வெள்ளி, 4 மார்ச், 2022

இளைஞர்கள், தாங்கள் தேர்வு செய்த துறைகளில், அறிவாற்றல் மற்றும் நிபுணத்துவத்தை பெறுவதற்கு, போட்டிகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 இளைஞர்கள், தாங்கள் தேர்வு செய்த துறைகளில், அறிவாற்றல் மற்றும் நிபுணத்துவத்தை பெறுவதற்கு, போட்டிகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன்  கடினமாக உழைக்க வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு ஆலோசனை கூறியுள்ளார்.

விஜயவாடாவில் சொர்ணபாரத் அறக்கட்டளையின் மூலம் தொழில் பயிற்சி பெறுவோரிடையே இன்று உரையாற்றிய அவர், இளைஞர்கள் பெரிய அளவில் கனவுகண்டு, தங்களது இலக்குகளை அடைய கட்டுப்பாட்டுடனும், நடைமுறை சார்ந்த முறையில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.

வியாழன், 3 மார்ச், 2022

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். - குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு நம்பிக்கை


 உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும், இந்த திசையில் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் இன்று நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், போர் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் திரு.எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் தம்மிடம் எடுத்துரைத்திருப்பதாக கூறினார்.

ஒருவர் எத்தனை மொழிகளை கற்றாலும் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.- குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம் .வெங்கையா நாயுடு


 இளைய தலைமுறையினரிடையே நமது மதிப்பு வாய்ந்த கலாச்சார பாரம்பரியம் குறித்த பெருமையை விதைக்கும் வகையில் இந்திய கண்ணோட்டத்தோடு இந்திய வரலாற்று பாடப் புத்தகங்களை மறு ஆய்வு செய்ய குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம் .வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஏலூருவில் சர் சி. ஆர். ரெட்டி கல்வி நிலையங்களின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பேசிய அவர், ஒருகாலத்தில் உலகத்துக்கே குருவாக இந்தியா விளங்கியது என்றும் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக நமது வேர்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.