சனி, 13 நவம்பர், 2021

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வேகமாக அதிகரித்து வருகிறது. - திரு பியூஷ் கோயல்


 கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வேகமாக அதிகரித்து வருகிறது என்று வர்த்தகம், தொழில்கள், ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

சிஐஐ-கிட்டா ஏற்பாடு செய்த இந்தியா-கொரியா வர்த்தக கூட்டாண்மை மன்றத்தின் நான்காவது பதிப்பில் உரையாற்றிய திரு பியூஷ் கோயல், "முதலீடுகளுக்கான கவர்ச்சிகரமான மற்றும் விருப்பமான இடமாக இன்று நாம் மாறியிருக்கிறோம்" என்று கூறினார்.

பாதுகாப்பு மற்றும் சில்லறை வணிகம் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்ய தென் கொரிய தொழில் முனைவோர்களுக்கு திரு கோயல் அழைப்பு விடுத்தார்.

"வாகனங்கள், ஜவுளி, உணவு பதப்படுத்துதல், தோல் பொருட்கள், உலோகங்கள், சுரங்கம், ரசாயனங்கள் மற்றும் எஃகு போன்ற நமது பாரம்பரியத் துறைகளை வலுப்படுத்துவதோடு, பாதுகாப்பு, மின்-வணிகம் மற்றும் சில்லறை விற்பனையில் போன்ற புதிய வளர்ந்து வரும் வாய்ப்புகளையும் பார்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சிக்கு மாண்புமிகு அதிபர் மூனின் ‘புதிய தெற்குக் கொள்கை’ வலுவூட்டுவதாக திரு கோயல் கூறினார். திறமையான மனிதவளம், குறைந்த விலை உற்பத்தி மற்றும் இந்தியாவில் உள்ள வணிகங்களுக்கு வழங்கப்படும் அரசின் ஆதரவின் போன்ற நன்மைகளைப் பயன்படுத்தி, பல கொரிய நிறுவனங்கள் ‘மேக் இன் இந்தியா’ வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக