செவ்வாய், 7 செப்டம்பர், 2021

‘சமுத்திர சேது’ மற்றும் ‘மிஷன் சாகர்’ ஆகியவற்றின் கீழ் இந்தியாவின் கொவிட் சேவைகளில் இந்திய கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது.- குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்


 பிராந்திய உறுதிகளை பூர்த்தி செய்வதிலும், இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள நமது நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான நமது ராஜதந்திர நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தகுந்த முயற்சிகளை இந்திய கடற்படை எடுத்துள்ளது என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறினார்.

‘சமுத்திர சேது’ மற்றும் ‘மிஷன் சாகர்’ ஆகியவற்றின் கீழ் இந்தியாவின் கொவிட் சேவைகளில் இந்திய கடற்படை முக்கிய பங்கு வகித்து இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நமது கடல்சார் அண்டை நாடுகள் மற்றும் பங்குதாரர்களுக்கு உதவி மற்றும் ஆதரவை அளித்தது. இந்திய கடற்படை பகுதியில் ‘விரும்பத்தக்க பாதுகாப்பு பங்குதாரர்’ மற்றும் ‘முதல் செயல்பாட்டாளர்’ எனும் இந்தியாவின் லட்சியத்தை நெருக்கடியின் போது இந்திய கடற்படையின் சிறப்பான செயல்பாடு வெளிப்படுத்தியது என்று கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சாவில் நடைபெற்ற இந்திய கடற்படை விமானப்பிரிவுக்கு குடியரசுத் தலைவரின் வண்ணம் (பிரெசிடெண்ட் கலர்) வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய திரு கோவிந்த் கூறினார்.

இந்த சாதனையை செய்ததற்காக இந்திய கடற்படையின் விமானப்பிரிவின் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். அமைதியின் போதும் போரின் போதும் நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான சேவைக்காக இந்த கவுரவம் இன்றைக்கு வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்திய கடற்படையின் உள்நாட்டுமயமாக்கல் திட்டம் குறித்து பேசிய குடியரசுத் தலைவர், உள்நாட்டுமயமாக்கலை இந்திய கடற்படை திறம்பட செயலாற்றி வருவதாகவும், அதன் தற்போதைய மற்றும் எதிர்கால கொள்முதல் திட்டங்களில் இது பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

இந்திய அரசின் ‘தற்சாபு இந்தியா’ கொள்கைக்கேற்ப, ‘மேக் இன் இந்தியா’ நடவடிக்கையில் தொடர் முன்னேற்றத்தை இந்திய கடற்படை அடைந்து வருவதாக அவர் கூறினார். விமான தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் பெரும் முன்னேற்றத்தின் காரணமாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், சென்சார்கள் மற்றும் இதர வசதிகள் கடற்படை விமானங்களில் பொருத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தால் நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முன்னேறிய இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் மற்றும் சேத்தக் விமானங்கள், பாதுகாப்பு துறையில் தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக