வெள்ளி, 10 செப்டம்பர், 2021

திறந்தவெளி சுரங்கத்தில் பணிபுரியும் முதல் அகழ்வாய்வு பொறியாளரான ஷிவானி மீனாவுக்கு திரு பிரகலாத் ஜோஷி வாழ்த்து


 நிலக்கரி அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ராஜ்ரப்பா திட்டத்தில் அகழ்வாய்வு பொறியாளராக இணைந்துள்ள ஷிவானி மீனாவுக்கு மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண் பணியாளர்கள் அதிக அளவில் சுரங்கத் துறையில் இணைவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிதி இரானியும் ஷிவானியின் சாதனையை பாராட்டியுள்ளார்.

திறந்தவெளி சுரங்கத்தில் அகழ்வாய்வு பிரிவில் பணிபுரியும் முதல் பெண் பொறியாளர் திருமிகு ஷிவானி மீனா ஆவார். கனரக இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கு அவர் பொறுப்பேற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூரை சேர்ந்தவரான திருமிகு ஷிவானி, ஐஐடி ஜோத்பூரில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். தனது சாதனைக்கு குடும்பத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய திட்டமாக ராஜ்ரப்பா திட்டம் விளங்குகிறது. தூய்மை இயக்கத்தின் கீழ் சிறந்த பணிக்கான விருதை நிலக்கரி அமைச்சகத்திடம் இருந்து ராஜ்ரப்பா பகுதி சமீபத்தில் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக