ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எல்லை சாலைகள் நிறுவனம் தொடர்ந்து உறுதி


 சுதந்திரத்தின் 75-வது ஆண்டை இந்தியா கொண்டாடும் வேளையில், பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய நம் நாட்டின் முயற்சிகளையும் இந்தியா கொண்டாடுகிறது. அந்த வகையில், எல்லை சாலைகள் நிறுவனமும் அதிகாரிகள் முதல் வணிக விமான ஓட்டுநர் உரிமைதாரர் வரை பல்வேறு நிலைகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்களை பணியில் இணைத்துள்ளது.‌

பெண்களுக்கு அதிகாரம், பொறுப்பு மற்றும் மரியாதை அளிப்பதன் மூலம் தேசிய கட்டமைப்பு முயற்சியில் அவர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் இந்த நிறுவனம் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களில் படிப்படியான நடவடிக்கைகளின் மூலம் சாலை கட்டமைப்பின் பல்வேறு நிலைகள் மற்றும் பொறுப்புகளில் பெண்களின் எண்ணிக்கையை எல்லை சாலைகள் நிறுவனம் அதிகரித்துள்ளது.

அவர்கள் தன்னிச்சையாக பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக பெண்களுக்கு அதிகாரம் மற்றும் பொறுப்புகளை வழங்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்ற மகளிர் குறிப்பிட்ட துறைகளில் பெண்கள் சக்தியின் அடையாளமாக திகழ்கிறார்கள்.

பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான வசதிகள், முறையான சுகாதாரத்தை அணுகுதல், சாகச நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள், விளையாட்டு மற்றும் முழுமையான மேம்பாட்டிற்கு ஊக்குவித்தல் போன்று பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பலதரப்பு அணுகுமுறையை இந்த நிறுவனம் பின்பற்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக