திங்கள், 27 செப்டம்பர், 2021

ஓமன் கடற்படை கமாண்டர் Rear Admiral Saif bin Nasser bin Mohsen Al-Rahbi- யுடன், இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.


 கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், ஓமன் சென்றுள்ளார். அவர் முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம், ஓமனுடனான இருதரப்பு உறவுகளை ஒருங்கிணைக்கும் மற்றும் ராணுவ கூட்டுறவுக்கான புதிய வழிகளை ஆராயும்.

மஸ்கட்டில், ஓமன் கடற்படை கமாண்டர் ரியர் அட்மிரல் சைப் பின் நசீன் பின் மொஹ்சன் அல் அராபியுடன், அட்மிரல் கரம்பிர் சிங்  இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பயணத்தின் போது, ஓமன் நாட்டின் முப்படை உயர் அதிகாரிகளையும் கடற்படை தளபதி சந்தித்து பேசுகிறார். ஓமனில் உள்ள முக்கிய பாதுகாப்புப்படை தளங்களையும் அவர் பார்வையிடுகிறார்.

கடற்படை செயல்பாடுகள், பயிற்சிகள் உட்பட பல துறைகளில் இந்திய கடற்படை மற்றும் ஓமன் கடற்படை இணைந்து செயல்படுகின்றன. கடந்த 1993ம் ஆண்டு முதல் ‘நசீம் அல் பஹர்’ என்ற பெயரில், இரண்டாண்டுக்கு ஒரு முறை கூட்டு பயிற்சியிலும் இரு நாட்டு கடற்படைகளும் ஈடுபட்டுள்ளன. கடற்படை தளபதியின் ஓமன் பயணம், இரு நாட்டு கடற்படைகள் இடையேயான ஒத்துழைப்பை வளர்க்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக