சனி, 25 செப்டம்பர், 2021

வெடிப்பொருட்களை துரிதமாக கண்டறியும், குறைந்த செலவிலான எலக்ட்ரானிக் பாலிமர் (Electronic polymer) சென்சார் கருவி.


 இந்திய விஞ்ஞானிகள் முதல் முறையாக, வெப்ப நிலைத்தன்மை மற்றும் செலவு குறைவான எலக்ட்ரானிக் பாலிமர் அடிப்படையிலான சென்சார் கருவியை உருவாக்கியுள்ளனர். இது அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்படும் நைட்ரோ-அரோமேட்டிக் ரசாயணங்களை துரிதமாக கண்டறியும்.

வெடிப்பொருட்களை அழிக்காமல் கண்டறிவது, பாதுகாப்பு மற்றும் குற்ற புலனாய்வுக்கும், மிக முக்கியமானது. இது போன்ற விஷயங்களில் ரசாயண சென்சார்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 

 ‘‘இந்த எலக்ட்ரானிக் பாலிமர் சென்சார் கருவி, வெடிப்பொருட்களை, அது இருக்கும் இடத்தில் உடனடியாக கண்டறியும்’’ என இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய குவஹாத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த டாக்டர் நீலோத்பல் சென் சர்மா கூறினார். மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை நிதியுதவியுடன் கூடிய இந்த புதிய தொழில்நுட்பத்தின் காப்புரிமைக்கு இந்த குழு விண்ணப்பித்துள்ளது.

இந்த சென்சார் கருவியை அறை வெப்பநிலையில் இயக்க முடியும். இது வெடிபொருட்களை உடனடியாக கண்டறியும். மற்ற ரசாயணங்களில் இருந்து குறைவான குறுக்கீட்டை இந்த சென்சார் கருவி பெற்றுள்ளது. இதன் தயாரிப்பு மிக எளிமையானது. ஈரப்பதத்தால் பாதிக்காது. இதில் உள்ள பாலிமர்கள் மட்கும் தன்மை கொண்டவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக