வியாழன், 16 செப்டம்பர், 2021

தற்போது வரை 302 விமானங்கள் வாயிலாக 10 நகரங்களுடன் விசாகப்பட்டினம் இணைக்கப்பட்டுள்ளது. - திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா


 மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.  சிந்தியா, இணை அமைச்சர் ஜெனரல் டாக்டர் வி.கே. சிங் (ஓய்வு), செயலாளர் திரு பிரதீப் கரோலா ஆகியோர் விசாகபட்டினம் (ஆந்திரப் பிரதேசம்), மும்பை (மகாராஷ்டிரா) இடையேயான முதல் ஸ்பைஸ்ஜெட் விமான சேவையை இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் திரு வசுபள்ளி கணேஷ் குமார் விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, “மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாது விசாகப்பட்டினம் போன்ற இந்தியாவின்  இதரப் பகுதிகளையும் இணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாகும்”, என்று கூறினார்.

“தற்போது வரை 302 விமானங்கள் வாயிலாக 10 நகரங்களுடன் விசாகப்பட்டினம் இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு முயற்சிகளின் வாயிலாக இந்த எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்தப் பகுதிக்குப் புதிய தோற்றத்தையும், புதிய பாதைகளையும் உருவாக்குவதில் உறுதி பூண்டுள்ளோம். 2016-ஆம் ஆண்டு 60 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை, ஏழு ஆண்டுகள் என்னும் குறுகிய காலத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 2021-ல் 136 ஆக அதிகரித்துள்ளது”, என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக