சனி, 18 செப்டம்பர், 2021

கோவாவின் ஒவ்வொரு சாதனையும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்னும் கருத்தைப் பறைசாற்றுவது என்னை மகிழ்ச்சியால் நிறைத்துள்ளது.- நரேந்திர மோடி


 புனிதமான கணேச உத்சவ் பருவத்தில், பாதுகாப்பு பெற்ற கோவா மக்களைப் பெரிதும் பாராட்டினார். கோவாவில் தகுதியுள்ள மக்கள் அனைவரும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார். ‘’ கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு பெரிய மைல்கல் ஆகும். கோவாவின் ஒவ்வொரு சாதனையும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்னும் கருத்தைப் பறைசாற்றுவது என்னை மகிழ்ச்சியால் நிறைத்துள்ளது’’ என்றார் அவர்.

இந்தப் பெரும் சாதனை தினத்தில் திரு மனோகர் பாரிக்கரின் சேவைகளை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

கடந்த சில மாதங்களில், பலத்த மழை, புயல்கள், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்த்து கோவா துணிச்சலுடன் போராடியதாக பிரதமர் குறிப்பிட்டார். அனைத்து கொரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், இந்த இயற்கைப் பேரிடருக்கு இடையிலும், கொரோனா தடுப்பூசி வேகத்தைப் பராமரித்த கோவா குழுவினரை அவர் புகழ்ந்து பாராட்டினார்.

சமூக, புவியியல் சவால்களைச் சமாளிப்பதில் கோவா காட்டிய ஒருங்கிணைப்பை பிரதமர் பாராட்டினார். மாநிலத்தின் தொலைதூரத்தில் உள்ள கோனாகோனா உப பிரிவில், தடுப்பூசி செலுத்தும் வேகம், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு முன்னுதாரணமாக இருந்தது. ‘’ சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்-ன் பயன்களை கோவா காட்டியுள்ளது’’ என அவர் தெரிவித்தார்.

நான் பல பிறந்த நாள்களைப் பார்த்திருக்கிறேன். நான் எப்போதும் அவற்றை லட்சியம் செய்வதில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளிலும், நேற்றைய தினம் என்னை பெரிதும் உணர்ச்சிவசப்பட வைத்து விட்டது என்று உணர்வுபூர்வமாக பிரதமர் குறிப்பிட்டார். நேற்றைய நிகழ்வு, நாட்டின் முயற்சிகள் மற்றும் கொரோனா வாரியர்களுக்கு கூடுதல் சிறப்பை அளித்துள்ளது. 2.5 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர்களின் கருணை, சேவை, கடமை உணர்வு ஆகியவற்றை அவர் பாராட்டினார். ‘’ இதனுடன் தொடர்புள்ள அனைவரும் சேவை மனப்பான்மையுடன் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இது அவர்களது கருணை, கடமை காரணமாக ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது ‘’, என உணர்ச்சிப் பெருக்குடன் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல், நாட்டு மக்களுக்கு உதவுவதில்  ஈடுபட்டுள்ள மருத்துவத் துறை மக்களின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர், அவர்களால்தான் நேற்று இது சாத்தியமானதாக கூறினார். சேவை உணர்வு கொண்ட மக்களின் கருணை மற்றும் கடமை உணர்வால், 2.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிந்துள்ளது. இமாச்சலம், கோவா, சண்டிகர், லட்சத்தீவுகள் ஆகியவை தகுதியுள்ளோருக்கு 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். சிக்கிம், அந்தமான் நிக்கோபார், கேரளா, லடாக், உத்தரகாண்ட், தாத்ரா நாகர் ஹவேலி ஆகியவை இந்த சாதனைக்கு பக்கத்தில் உள்ளன.

இந்தியா தனது சுற்றுலா தளங்களில் தடுப்பூசி முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இது பற்றி இதுவரை வெளியில் பேசப்படவில்லை. நமது சுற்றுலா இடங்கள் திறக்கப்படுவது முக்கியமாகும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அண்மையில் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்குதல், சுற்றுலா துறையுடன் தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு அரசின் உத்தரவாதத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வசதி, பதிவு பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

இரட்டை எஞ்சின் அரசு, கோவா சுற்றுலா துறையை மேலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் ஆற்றல் மிக்கதாக மாற்றியுள்ளதாக கூறிய பிரதமர், மாநிலத்தின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அதிக வசதிகளை அளித்துள்ளதாக குறிப்பிட்டார். மோபா கிரீன்பீல்டு விமான நிலையம், ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் 6 வழிச்சாலை, அடுத்த சில மாதங்களில் திறக்கப்படவுள்ள வடக்கு, தெற்கு கோவாவை இணைக்கும் சுவாரி பாலம் ஆகியவை மாநிலத்தின் இணைப்பு தொடர்பை அதிகரித்து வருகின்றன.

அம்ரித் கால் தன்னிறைவை அடைய சுயம் பூர்ண கோவா என்ற உறுதியை கோவா எடுத்துக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய திரு மோடி, 50-க்கும் மேற்பட்ட பாகங்களின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். கழிப்பறை வசதி, முழுமையான மின்சாரமயமாக்கல், வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கும் பெரு முயற்சி ஆகிய கோவாவின் சாதனைகளை அவர் பட்டியலிட்டார். நாட்டில் இரண்டு ஆண்டுகளில் 5 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கோவா மேற்கொண்ட முயற்சிகள், சிறந்த நிர்வாகத்துக்கான தெளிவான முன்னுரிமையைக் காட்டுகிறது. ஏழை குடும்பங்களுக்கு ரேசன் வழங்குதல், இலவச எரிவாயு சிலிண்டர், பிரதமர் சம்மான் நிதி விநியோகம், பெருந்தொற்று காலத்திலும் கிசான் கடன் அட்டைகள் விரிவாக்கம், தெருவோர வியாபாரிகளுக்கு ஸ்வநிதி வழங்கல் போன்ற கோவா மாநிலத்தின் முயற்சிகளை பிரதமர் பட்டியலிட்டார். எல்லையற்ற வாய்ப்புகளின் மாநிலம் கோவா என்று கூறிய பிரதமர், ‘’ கோவா நாட்டின் வெறும் மாநிலம் மட்டுமல்ல, இந்தியா முத்திரையின் வலுவான அடையாளம்’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக