சனி, 25 செப்டம்பர், 2021

இரண்டு நாள் ‘‘தேசிய பழங்குடியின திறமையாளர்கள் மாநாடு’’-ஐ மத்திய பழங்குடியின இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு தொடங்கி வைத்தார்.


 இரண்டு நாள் ‘‘தேசிய பழங்குடியின திறமையாளர்கள் மாநாடு’’-ஐ மத்திய பழங்குடியின இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு தொடங்கி வைத்தார். செப்டம்பர்  23, 24ம் தேதிகளில் நடைபெறும் இந்த மாநாடு தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி கழகம், இந்திய பொது நிர்வாக கழகம், ஒடிசா கேஐஎஸ்எஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், எஸ்சிஎஸ்சிஆர்டிஐ ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

இந்த பயிலரங்கில், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த  250க்கும் மேற்பட்ட பழங்குடியின ஆராய்ச்சி மாணவர்களுடன், மத்திய அமைச்சர் கலந்துரையாடினார். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் வழிகாட்டிகள் கலந்துரையாடினர்.

பழங்குடியினர் ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய, மாநில அளவில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட வைப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு, ஆதிவாசி சமுகத்தினர், ஆராய்ச்சி துறையில் மட்டும் அல்லாமல், விளையாட்டு மற்றும் கைவினைத் தொழில்கள் உட்பட பல துறைகளில் அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும், திறமைசாலிகளாகவும் உள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக