புதன், 29 செப்டம்பர், 2021

நவம்பர் மாதம் 1 - ஆம் தேதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறப்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.- ஜி.கே.வாசன்


நவம்பர் மாதம் 1 - ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை திறப்பது வரவேற்கதக்கது , 

கொரோனா தொற்றை முன்னிட்டு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தொடங்க வேண்டும் . நவம்பர் 4 - ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை வருகிறது . 

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்கு அதிக அளவில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் . 

அதோடு பண்டிகையை முன்னிட்டு வியாபார நிலையங்களில் அதிக கூட்டம் இருக்கும் . ஆகவே தீவாவளி பண்டிகை முடிந்த பிறகு பள்ளிகளை திறப்பதற்கும் , கொரோனா கோட்பாடுகளை கடைப் பிடிப்பதற்கும் ஏதுவாக இருக்கும் . 

கொரோனா பரவல் இதுவரை முற்றுப் பெறாத இந்த சூழ்நிலையில் பண்டிகை காலம் , அதிகமான கூட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டு மாணவர்கள் பாதுகாப்பாக மீண்டும் பள்ளி செல்ல தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் . 

மக்கள் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் திருப்ப வேண்டும் . ஆகவே 1 - ஆம் வகுப்பு முதல் 8 - ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை நவம்பர் மாதம் 1 - ஆம் தேதி தொடங்க வேண்டும் என்பதை வார இறுதிவரை பொறுத்திருந்து நவம்பர் 8 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்குவது தான் மிக சரியாக இருக்கும் . 

எனவே தமிழக அரசு நவம்பர் மாதம் 1 - ஆம் தேதி பள்ளிகளை திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக