சனி, 25 செப்டம்பர், 2021

உள்ளூர் பட்டு தொழிலை ஊக்குவித்து வேலைவாய்ப்புகளை உருவாக்க ஒடிசாவின் முதல் பட்டு நூல் உற்பத்தி மையத்தை கேவிஐசி (KVIC) நிறுவியுள்ளது.


 ஒடிசாவின் முதல் டசர் பட்டு நூல் உற்பத்தி மையத்தை கட்டாக் மாவட்டத்திலுள்ள சவுத்வாரில் நிறுவும் வரலாற்று சிறப்புமிக்க முன்முயற்சியை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் (கேவிஐசி) எடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் பட்டு தொழில் ஊக்குவிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாகி, பட்டு உற்பத்தி செலவு குறையும்.

பட்டு வகைகளில் மிகவும் சிறப்பானவற்றில் ஒன்றாக டசர் பட்டு திகழ்கிறது. பட்டு நூல் உற்பத்தி மையத்தை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணைய தலைவர் திரு வினய் குமார் சக்சேனா வெள்ளியன்று திறந்து வைத்தார்.

ஒடிசாவின் மொத்த காதி உடை உற்பத்தியில் 75 சதவீத பங்கை பட்டு வகிக்கும் நிலையில் இந்த நடவடிக்கை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 34 பெண்கள் உட்பட 50 கலைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை இந்த மையம் அளிப்பதோடு, பட்டுப்பூச்சி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட பழங்குடி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கிறது.

மேலும், மாநிலத்தில் உள்ள நெசவாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு இதன் மூலம் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ பட்டும், ஆறு பெண்கள் உள்ளிட்ட 11 கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக