செவ்வாய், 21 செப்டம்பர், 2021

தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2020-ஐ பிரிகேடியர் எஸ் வி சரஸ்வதிக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார்


 ராணுவ செவிலியர் சேவை (எம்என்எஸ்) துணை தலைமை இயக்குநர் பிரிகேடியர் எஸ் வி சரஸ்வதிக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2020 வழங்கப்பட்டது. ராணுவ செவிலியர் சேவையில் மகத்தான பங்களிப்புக்காக பிரிகேடியர் எஸ் வி சரஸ்வதிக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் காணொலி விழாவில் இந்த விருதை வழங்கினார். தேசிய ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது என்பது செவிலியர்களுக்கான மிக உயர்ந்த விருது ஆகும்.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிகேடியர் சரஸ்வதி டிசம்பர் 28, 1983-ல் எம்என்எஸ்-ல் பணி நியமனம் செய்யப்பட்டார். அவர் மூன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக எம்என்எஸ்-ல் பணியாற்றியுள்ளார், குறிப்பாக அறுவை சிகிச்சை செவிலியராக 3,000-க்கும் மேற்பட்ட உயிர்காக்கும் மற்றும் அவசர அறுவை சிகிச்சைகளுக்கு அவர் உதவியுள்ளார்.

மேலும், குடியிருப்போர், அறுவை சிகிச்சை அறை செவிலியர் பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்களுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். பயிற்சி திட்டங்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான தையல் பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர் தயார் செய்துள்ளார்.

எம்என்எஸ்ஸை பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களில் பிரிகேடியர் சரஸ்வதி பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அடிப்படை சிகிச்சையில் அவர் பயிற்சி அளித்துள்ளார். இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு ராணுவ மருத்துவமனைகள் மற்றும் காங்கோவில் ஐக்கிய நாடுகள் அமைதி படைகளில் அவர் தனது சேவைகளை வழங்கியுள்ளார். எம்என்எஸ் துணை இயக்குநராவதற்கு முன்பு பல்வேறு பொறுப்புகளில் அவர் திறம்பட பணியாற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக