சனி, 18 செப்டம்பர், 2021

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோருக்காக கோளரங்க புதுமை சவாலை மைகவ் கடந்த வாரம் தொடங்கியது.


 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோருக்காக கோளரங்க புதுமை சவாலை மைகவ் கடந்த வாரம் தொடங்கியது. 2021 அக்டோபர் 10 வரை இதற்காக பதிவு செய்துக் கொள்ளலாம்.

நமது கோளரங்குகளுக்கான அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக புது நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தொழில் முனைவோரிடம் இருந்து விண்ணப்பங்களை இந்த சவால் வரவேற்கிறது.

கோளரங்கு தொழில்நுட்பத்தின் அனைத்து பிரிவுகளின் நிபுணர்களும் இந்த சவாலில் பங்கேற்பதற்காக https://innovateindia.mygov.in/ என்ற முகவரியை அணுகலாம். புது நிறுவனங்கள், இந்திய சட்டப்பூர்வ நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது குழுக்கள் இதில் பங்கேற்று தங்களது யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

பிரச்சினையைத் தீர்ப்பது குறித்த அணுகல், பொருளுக்கான சிந்தனை, புதுமையின் அளவு மற்றும் புதுமையான அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 3 லட்சமும் மூன்றாம் பரிசாக ரூபாய் 2 லட்சமும்  வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக