சனி, 18 செப்டம்பர், 2021

வேளாண்மை குறித்த உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் வளரும் நாடுகளுக்கு எதிராக உள்ளது.- திரு பியூஷ் கோயல்


 ஜி-33 அமைப்பின் வேளாண் முன்னுரிமை விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவும், 2021 நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ள 12வது அமைச்சரவை மாநாட்டுக்கு முன்னோக்கியுள்ள வழி குறித்து ஆலோசிக்கவும், ஜி-33 அமைப்பின் முறைசார அமைச்சரவை கூட்டத்தை காணொலி காட்சி மூலம் இந்தோனேஷியா நடத்தியது.  இதற்கு இந்தோனேஷிய வர்த்தக அமைச்சர் திரு முகமது லுத்ஃபி தலைமை தாங்கினார்.

உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் நகோசி ஒகோன்ஜோ இவேலா முக்கிய உரையாற்றினார்.  இந்த அமைப்பில் மொத்தம் உள்ள 47 உறுப்பினர்களில், இந்தியா உட்பட 21 உறுப்பு நாடுகள் பங்கேற்றன.

இந்த கூட்டத்தின் இந்தியக் குழுவுக்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், G-33 உணவுப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பொதுப் பிரச்சினைகளுக்கு (PSH) நிரந்தர தீர்வுக்கான நேர்மறையான முடிவுகளுக்கும்,சிறப்பு பாதுகாப்பு முறைகளை (SSM) விரைவில் உறுதி செய்வதற்கும், உள்நாட்டு ஆதரவில் சீரான முடிவுக்கும் ஜி-33 பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

உலக வர்த்தக அமைப்பில், வேளாண் மீதான ஒப்பந்தம் அதிக ஏற்றத் தாழ்வுகளுடன் உள்ளது. இது வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாகவும், வளரும் நாடுகளுக்கு எதிராகவும் உள்ளது. அதனால் வேளாண் சீர்திருத்தத்தின் முதல் நடவடிக்கையாக, இந்த சமநிலையற்ற தன்மை சரிசெய்யப்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தின் முடிவில், விவசாயத்தில் உலக வர்த்தக அமைப்பின் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான உறுதிப்பாட்டுடன் கூடிய கூட்டறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. வளரும் நாடுகளின் மேம்பாட்டு பிரச்சினைகள் திருப்திகரமாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் இந்த கூட்டம் அழைப்பு விடுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக