வியாழன், 23 செப்டம்பர், 2021

“அனைத்து இந்தியர்களையும் இணைத்தல்” என்ற தலைப்பில் ஓர் பயிலரங்கை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்தியது.


 இணைய இணைப்புகளில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியாவை உருவாக்குவதற்காக “அனைத்து இந்தியர்களையும் இணைத்தல்” என்ற தலைப்பில் ஓர் பயிலரங்கை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்தியது. நாட்டில் தற்போது இணைய வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் நகரங்களில் சேவைகளை அளிப்பதற்கான திட்டம் குறித்து விவாதிப்பதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பத் துறை, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட அரசு மற்றும் தனியார் துறை பங்குதாரர்கள் பயிலரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில்கொண்டு, உலகின் பிரமாண்ட கண்ணாடி இழைக்கற்றை வாயிலான கிராமப்புற பிராட்பேண்ட் இணைப்பு திட்டமான பாரத் நெட் பற்றியும் இந்த நிகழ்ச்சியின்போது ஆய்வு செய்யப்பட்டது. இணைய வசதி இல்லாத பகுதிகள்/ கிராமங்களில் உடனடியாக வசதிகளை அமல்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும்  ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த இணைய சேவையின் மூலம் இந்தியர்கள் அனைவரையும் இணைக்கும்  அரசின் நோக்கத்தை வலியுறுத்தினார். “இணையத்தின் ஆற்றல் சக்தியின் மூலம், மின்னணு இந்தியா வாயிலாக அனைத்து குடிமக்களுக்கும் அதிகாரம் அளித்து, அதேவேளையில் மின்னணு பொருளாதாரம் மற்றும் பணிகளை விரிவுபடுத்துவதே பிரதமரின் தொலைநோக்குப் பார்வை”, என்று அவர் கூறினார்.

உலகளாவிய இணைய சேவையை அடைவது குறித்த அரசு மற்றும் தனியார் பங்குதாரர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இந்த பயிலரங்கம் வழங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக