வெள்ளி, 1 ஜூலை, 2022
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தீர்மானம், கிராமப்புற இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இருந்துதான் தொடங்குகிறது. - தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்
சனி, 6 நவம்பர், 2021
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உடன் தீபாவளி கொண்டாடினார் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொழில் முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்
பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உடன் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தீபாவளி கொண்டாடினார்.
நாஸ்காம் மற்றும் பெங்களூருவில் உள்ள எஸ்டிபிஐ-ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் உரையாடிய அமைச்சர், அவர்களது பயணம் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், ஸ்டார்ட்அப் திட்டத்திற்கு அரசு அளித்துவரும் ஆதரவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் கேட்டு அறிந்துகொண்டார்.
திங்கள், 1 நவம்பர், 2021
டேராடூனில் உத்தராகண்டின் முதல் இணையதள நிலையம்: மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார்
டேராடூனில் உத்தராகண்டின் முதல் இணையதள நிலையத்தை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், புதுதில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்திய தேசிய இணையதள நிலையத்தின்(நிக்சி) 10-வது நிலையம் உத்தராகண்டில் இணையதளம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை மேம்படுத்த உதவும். இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திர சேகர் பேசியதாவது
வியாழன், 28 அக்டோபர், 2021
இந்திய தொழில்நுட்ப சூழலியல் வளர்ச்சியை செயற்கை நுண்ணறிவு வேகமாக செயல்படுத்தும்.- மத்திய இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர்
மீள் வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் அசோசேம் அமைப்பு காணொலி வாயிலாக ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் துறை மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர், “இந்திய தொழில்நுட்ப சூழலியல் வளர்ச்சியை செயற்கை நுண்ணறிவு வேகமாக செயல்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 19 அக்டோபர், 2021
இந்தியாவை மின்னணு மற்றும் தொழில்நுட்ப தலைமையகமாக மாற்றுவதில் திரு நரேந்திர மோடி அரசு தீவிரமாக உள்ளது.- மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்
இணையத்தை பயன்படுத்தும் உபகரணங்களுக்கான கடன் அட்டை அளவில் தயாரிக்கப்பட்டுள்ள சிறு பெட்டகத்தை வெளியிட உள்ள பெங்களூருவின் சிடாக் மையத்தை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டார். இணையப் பயன்பாட்டு உபகரணங்களின் மேம்பாட்டு தளமான இண்டஸ் ஐஓடி சிறு பெட்டகத்தை சிடாக் மையம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடன் அட்டை அளவில் சிடாக்கால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெட்டகத்தில் ஆறு சென்சார்கள் மற்றும் ஏராள வசதிகள் உள்ளன. சிறிய மற்றும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இந்த கிட், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளில் உள்ளூர் மற்றும் ஸ்மார்ட் தீர்வுகளை உருவாக்க உதவும்.
வியாழன், 23 செப்டம்பர், 2021
“அனைத்து இந்தியர்களையும் இணைத்தல்” என்ற தலைப்பில் ஓர் பயிலரங்கை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்தியது.
இணைய இணைப்புகளில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியாவை உருவாக்குவதற்காக “அனைத்து இந்தியர்களையும் இணைத்தல்” என்ற தலைப்பில் ஓர் பயிலரங்கை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்தியது. நாட்டில் தற்போது இணைய வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் நகரங்களில் சேவைகளை அளிப்பதற்கான திட்டம் குறித்து விவாதிப்பதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பத் துறை, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட அரசு மற்றும் தனியார் துறை பங்குதாரர்கள் பயிலரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

