வெள்ளி, 1 ஜூலை, 2022

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தீர்மானம், கிராமப்புற இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இருந்துதான் தொடங்குகிறது. - தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்



 பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தீர்மானம், கிராமப்புற இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இருந்துதான் தொடங்குகிறது. கிராமங்கள் தற்சார்பு அடைவதன் வாயிலாகத்தான் தற்சார்பு இந்தியா பயணம் மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு/சுயவேலைவாய்ப்பு மற்றும் உள்ளூரிலேயே தொழில்முனைவோர் ஆவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுதான் நரேந்திர மோடி அரசின்  நம்பிக்கையாக உள்ளது என மத்திய திறன் மேம்பாடு & தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். போபாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் கிராமின் உத்யாமி எனப்படும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கான முன்னோடி திட்டமான கிராமப்புற பழங்குடியினர் தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தின் கீழ், முதலாவதாக பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்களை  வழங்கி அவர் பேசினார்.

 மத்திய பிரதேச ஆளுநர் திரு மக்கன் பாய் பட்டேல் தலைமையில்  இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிராமப்புற பொறியாளர்களாக மாறியுள்ள சுமார் 140 பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக உரையாற்றிய மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், “வளமைக்கான பாஸ்போர்ட்” என்று கூறப்படும் திறன் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த பயிற்சியாளர்களை பாராட்டினார்.

 இந்த முன்னோடி திட்டம் குறித்து மனநிறைவு தெரிவித்த அமைச்சர், இத்திட்டம் இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள பிற மாவட்டங்களிலும் தொடர ஒரு வாய்ப்பை அளித்திருப்பதாக அவர் கூறினார்.  உள்ளூரில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பழங்குடியின இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக இந்த பயிற்சி அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது மாவட்டங்களில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்றும் திரு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக