வெள்ளி, 1 ஜூலை, 2022

முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்திற்கான மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கொள்முதலுக்கு நிதி வரம்பை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்


முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்திற்கான மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கொள்முதலுக்கு நிதி வரம்பை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் உடனடியாக கிடைக்காத, அவசர தேவைக்கான, உயிர்காப்பதற்கான, அத்தியாவசியமான மருந்துகளை 100% அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் மருந்து நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம்.  முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் பயனாளிகளுக்கு மருந்துகள் எளிதாகவும், உரிய நேரத்திலும் கிடைப்பதை இது உறுதிசெய்யும். ஏ மற்றும் பி வகைக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், சி வகைக்கு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், டி வகைக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும் கொள்முதல் நிதி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
     மருந்துகள் விநியோகம் தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. இசிஹெச்எஸ் பயனாளிகளுக்கு மருந்துகள் கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகளில் தொடர்ச்சியான மாற்றங்களை மத்திய அரசு ஏற்கனவே செய்துள்ளது. இசிஹெச்எஸ் சிகிச்சை மையங்களில் கிடைக்காத மருந்துகளை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ளவும், அதற்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் 25.03.2022 அன்று அரசு அறிவித்தது. தற்போது கொள்முதல் செய்யும் மருந்துகளுக்கான விலை உச்சவரம்பை உயர்த்தியிருப்பது மூத்த ராணுவ வீரர்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் எளிதாகக் கிடைப்பதை நோக்கிய நடவடிக்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக