ராஜ்நாத் சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜ்நாத் சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 மே, 2023

மாலத்தீவு - இந்தியா இடையேயான உறவு காலப்போக்கில் மேலும் வலுவடையும்.- திரு ராஜ்நாத் சிங்


 3 நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தனது பயணத்தின் இரண்டாவது நாளில்,  2023 மே 2-ம் தேதியன்று மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளிடம் (MNDF) ஒரு விரைவு ரோந்து கப்பல் மற்றும் தாக்குதல் கப்பலை ஒப்படைத்தார். மாலத்தீவு அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் திருமதி மரியா அகமது தீதி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. - பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்


 பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சோம்நாத்தில் சௌராஷ்டிரா- தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்   இதனைத் தெரிவித்தார்.  நாட்டின் நூற்றாண்டு கால பழமை மிகுந்த பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும்  மக்களை இணைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.  இந்தியாவின் ஆழமாக வேரோடிய பாரம்பரியங்கள் அதன் வலிமையையும், ஒற்றுமையை பிரதிபலிப்பதுடன்,  எந்த சவாலையும் எதிர்நோக்கி உறுதியுடன் நிற்கும் திறனைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சனி, 15 ஏப்ரல், 2023

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மூலம் நாட்டை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.-மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்


 அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாட்டை மேம்படுத்த புதிய யோசனைகளைக் கொண்டு வரவும், இந்தியாவை பாதுகாப்பான மற்றும் வலிமையானதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் அரசுக்கு உதவுமாறும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2023 ஏப்ரல் 15-ம் தேதியன்று உதய்பூரில் ஜனார்தன் ராய் நகர் ராஜஸ்தான் வித்யாபீடத்தின் (பல்கலைக்கழகமாக கருதப்படும்) 16-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் உரையாற்றினார். வருங்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

செவ்வாய், 5 ஜூலை, 2022

பிரெஞ்ச் விமான என்ஜின் உற்பத்தியாளரான (SAFRAN) குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி புதுதில்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சந்திப்பு.

 


பிரெஞ்ச் நிறுவனமான சாஃப்ரான் குழுமத்தின் உயர்மட்ட குழுவினர், புதுதில்லியில் ஜூலை 5, 2022 அன்று பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.  பயணியர்  மற்றும் போர் விமானங்களுக்கான அதிநவீன என்ஜின் அசல் பாகங்கள்  உற்பத்தியாளர்களில்,சாஃப்ரான் குழுமம் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது.

வெள்ளி, 1 ஜூலை, 2022

முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்திற்கான மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கொள்முதலுக்கு நிதி வரம்பை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்


முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்திற்கான மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கொள்முதலுக்கு நிதி வரம்பை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் உடனடியாக கிடைக்காத, அவசர தேவைக்கான, உயிர்காப்பதற்கான, அத்தியாவசியமான மருந்துகளை 100% அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் மருந்து நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம்.  முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் பயனாளிகளுக்கு மருந்துகள் எளிதாகவும், உரிய நேரத்திலும் கிடைப்பதை இது உறுதிசெய்யும். ஏ மற்றும் பி வகைக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், சி வகைக்கு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், டி வகைக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும் கொள்முதல் நிதி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 17 ஜூன், 2022

அக்னிபத் திட்டத்தில் வயது தளர்வு அறிவித்திருப்பது இளைஞர்கள் மீது அரசுக்கு உள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது. - திரு.ராஜ்நாத் சிங்


 இளைஞர்கள் ஆயுதப்படையில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னிபத் திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இரண்டுநாள் பயணமாக ஜம்மு&காஷ்மீர் சென்றுள்ள அவர், கடந்த இரண்டு ஆண்டுகள், கொரோனா காரணமாக ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெறாததால், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இளைஞர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, 2022-ம் ஆண்டில் அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி அரசு அறிவித்துள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

திங்கள், 13 ஜூன், 2022

தேச பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், வருங்கால சவால்களை எதிர்கொள்ளவும் நிர்வாகம், ராணுவம் மேலும் இணைந்து செயல்படுவது அவசியம்.-திரு. ராஜ்நாத் சிங்


தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், எப்போதும் உருவாகி வரும் உலகளாவிய சூழ்நிலைகளில் இருந்து எழக்கூடிய எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் சிவில் நிர்வாகம் மற்றும் ஆயுதப்படைகளின் அதிக ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

 ஜூன் 13,2022 ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) 28வது கூட்டு சிவில்-ராணுவப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றவர்களிடம் அவர் உரையாற்றினார். பல இராணுவத் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பின் பொதுவான அம்சத்துடன் சிவிலியன் பரிமாணம் சேர்க்கப்பட்டுள்ளதால், தேசிய பாதுகாப்பு என்ற கருத்து மிகவும் விரிவானதாக மாறியுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

வெள்ளி, 10 ஜூன், 2022

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வியட்நாம் நாட்டிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை வழங்கினார்.


 வியட்நாம் நாட்டின் ஹாய் ஃபாங்கில் உள்ள ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திற்கு ஜூன் 9-ஆம் தேதி சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வியட்நாம் நாட்டிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை வழங்கினார். இந்திய அரசு, வியட்நாம் நாட்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தப் படகுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. முதல் ஐந்து படகுகள் இந்தியாவின் லார்சன் & டியூப்ரோ கப்பல் கட்டும் தளத்திலும், இதர 7 படகுகள் ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திலும் உருவாக்கப்பட்டன.

வியாழன், 19 மே, 2022

மகிழ்ச்சி மற்றும் சமநிலையான வாழ்க்கைக்கு மக்கள் அனைவரும் யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும் என ராஜ்நாத் சிங் வேண்டுகோள்


 சர்வதேச யோகா தினம் ஜுன் 21-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் தில்லியில் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் மற்றும் நிதி ஆலோசகர் சஞ்சீவ் மிட்டல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர்.

சனி, 14 மே, 2022

கொவிட்-19 இடையே அரசு எடுத்த முழுமூச்சான முயற்சிகளின் காரணமாக இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது. - பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்


 உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் மே 14, 2022 அன்று இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ஐசிஏஐ) மத்திய இந்திய பிராந்திய குழுவின் லக்னோ கிளை ஏற்பாடு செய்த நிதிச் சந்தை குறித்த பயிலரங்கில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

பொருளாதாரம் தொடர்பான புதிய முன்னேற்றங்களைப் பற்றி பங்கேற்பாளர்களுக்கு தெரியப்படுத்தி இந்தத் துறையுடன் தொடர்புடைய எதிர்காலச் சவால்களைச் சமாளிக்க அவர்களைப் பயிற்றுவிப்பதும் ஊக்குவிப்பதும் பயிலரங்கின் நோக்கமாகும்.

செவ்வாய், 8 மார்ச், 2022

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தோ-பசிபிக் ராணுவ சுகாதாரக் கருத்தரங்கைப் (IPMHE) , பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.


 நான்கு நாட்கள் நடைபெறும்  இந்தோ-பசிபிக் ராணுவ சுகாதாரக் கருத்தரங்கைப் (IPMHE) ,  பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அன்று (மார்ச் 7ம் தேதி) காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த கருத்தரங்கைப் பாதுகாப்புப் படைகள் மருத்து சேவைகள் பிரிவு (AFMS) மற்றும் அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டுப்பாட்டு மையம் (USINDOPACOM) ஆகியவை இணைந்து நடத்துகிறது. 

சனி, 13 நவம்பர், 2021

நரேந்திர மோடியின் லட்சியமான ‘தற்சார்பு இந்தியாவை’ அடைய உதவும் வலுவான பாதுகாப்பு உற்பத்திச் சூழலியல் உத்தரப் பிரதேசத்தில் விரைவில் உருவாக்கப்படும்.- திரு ராஜ்நாத் சிங்


 உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தில் முதலீட்டை அதிகரிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் லக்னோவில் உள்ள முதல்வர் இல்லத்தில் நவம்பர் 12, 2021 அன்று ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தனியார் பாதுகாப்புத் தொழில்துறை பிரதிநிதிகளின் கருத்துகளை பாதுகாப்பு அமைச்சர் கேட்டறிந்தார். முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.

வியாழன், 28 அக்டோபர், 2021

‘இந்தோ-பசிபிக்’ பகுதி பல நாடுகளின் விதிமுறைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இயற்கையான பகுதி என பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.- திரு.ராஜ்நாத் சிங்


இந்தோ-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை 2021 காணொலிகாட்சி மூலம் அக்டோபர் 27ம் தேதி முதல் 29ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் முக்கிய உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

வெள்ளி, 22 அக்டோபர், 2021

நிலத்திற்காகவோ, வளத்திற்காகவோ, ஆதாரத்திற்காகவோ நடத்தப்படாத வெகு சிலப் போர்களில் 1971-ம் ஆண்டு போரும் ஒன்று.- திரு.ராஜ்நாத் சிங்


 நிலத்திற்காகவோ, வளத்திற்காகவோ, ஆதாரத்திற்காகவோ நடத்தப்படாத வெகு சிலப் போர்களில் 1971-ம் ஆண்டு போரும் ஒன்று என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

2021 அக்டோபர் 22 அன்று பெங்களூரு யெலஹங்கா விமான நிலையத்தில் இந்திய போர் வெற்றி பொன்விழா நினைவாக இந்திய விமானப்படை ஏற்பாடு செய்த மூன்று நாள் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய அவர், "மனிதாபிமானம் மற்றும் ஜனநாயகத்தின் கண்ணியத்தை பாதுகாப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது" என்று கூறினார்.

திங்கள், 18 அக்டோபர், 2021

2021-ம் ஆண்டின் கடற்படை தளபதிகள் நிலையிலான இரண்டாவது மாநாடு இன்று புதுதில்லியில் தொடங்கியது.


 2021-ம் ஆண்டின் கடற்படை தளபதிகள் நிலையிலான இரண்டாவது மாநாடு இன்று புதுதில்லியில் தொடங்கியது. தொடக்க அமர்வின் போது கடற்படை தளபதிகளிடையே தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

முக்கிய செயல்பாடுகள், பொருட்கள், தளவாடங்கள், மனித வள மேம்பாடு, பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான இந்த மாநாட்டில் இந்திய கடற்படையின் அனைத்து பிரிவு தளபதிகளும் கலந்து கொண்டனர்.

வியாழன், 14 அக்டோபர், 2021

நாட்டின் வளர்ச்சிக்கு எல்லையோர சாலைகள் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. - பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்


 சேலா பிரதான சுரங்கத்தின் முக்கிய குழாயின் வெடிப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் காணொலி மூலம் தலைமை தாங்கினார். மேலும், எல்லையோர சாலைகள் நிறுவனம் ஏற்பாடு செய்த ‘இந்தியா @ 75 இருசக்கர வாகன பயணத்தையும்’ புதுதில்லியில் 2021 அக்டோபர் 14 அன்று அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் அமைந்துள்ள செலா சுரங்கப்பாதை, தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், பிராந்தியத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

சனி, 9 அக்டோபர், 2021

இந்திய கடலோர காவல்படை வீரர்களுக்கு வீரதீர மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கங்களை பாதுகாப்பு அமைச்சர் திரு திரு ராஜ்நாத் சிங் வழங்கினார்


 புதுதில்லியில் 2021 அக்டோபர் 9 அன்று நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல்படை வீரர்களுக்கு வீரதீர மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கங்களை பாதுகாப்பு அமைச்சர் திரு திரு ராஜ்நாத் சிங் வழங்கினார்.

குடியரசுத் தலைவரின் மூன்று தத்ராக்ஷக் பதக்கங்கள் (சிறப்பான சேவை), எட்டு தத்ராக்ஷக் பதக்கங்கள் (வீர தீர செயல்கள்) மற்றும் 10 தத்ராக்ஷக் பதக்கங்கள் (சிறப்பான சேவை) உட்பட மொத்தம் 21 விருதுகள் விழாவின் போது வழங்கப்பட்டன. தன்னலமற்ற அர்ப்பணிப்பு, முன்மாதிரியான தைரியம் மற்றும் இக்கட்டான நிலைமைகளில் கடலோர காவல்படை பணியாளர்களின் வீர தீர செயல்களை அங்கீகரிப்பதற்காக இந்த பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

திங்கள், 4 அக்டோபர், 2021

வலுவான தற்சார்புள்ள புதிய இந்தியாவை கட்டமைக்கும் அரசின் தீர்மானத்தை கூட்டான முயற்சியின் மூலமே சாதிக்க முடியும்.- திரு. ராஜ்நாத் சிங்


 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் புதுதில்லியில் நடைபெற்ற கனவுக்கான துணிவு 2.0 போட்டியில் வெற்றிப் பெற்றவர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அக்டோபர் 4 அன்று பாராட்டினார். தனிநபர் பிரிவில் 22 பேர், புதிய தொழில் பிரிவில் 18 பேர் என மொத்தம் 40 வெற்றியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் விருதுகளை வழங்கினார். நாட்டில் உள்ள இளம் சிந்தனையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்களுக்காக கனவுக்கான துணிவு 3.0-வையும் அவர் தொடங்கி வைத்தார்.

புதன், 29 செப்டம்பர், 2021

பொதுத்துறை- தனியார் துறை கூட்டணி, இராணுவ உற்பத்திப் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.- மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்


 விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் சர்வதேச பாதுகாப்புச் சூழலில் ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்த சூழலை அரசு உருவாக்கியிருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற இந்திய ராணுவ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (எஸ்ஐடிஎம்) வருடாந்திரக்  கூட்டத்தில் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தங்களது ராணுவத்தை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்துவதாகவும், அதிகரித்துவரும் பாதுகாப்பு விஷயங்கள், எல்லைப் பூசல்கள் போன்றவற்றினால் ராணுவ உபகரணங்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

திங்கள், 27 செப்டம்பர், 2021

நாட்டின் நலனை பாதுகாப்பதற்காக, ஆயுதப்படைகள் இடையே எதிர்கால ராணுவ உத்திகள் மற்றும் நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.


 நாட்டின் நலனை பாதுகாப்பதற்காக, ஆயுதப்படைகள் இடையே எதிர்கால ராணுவ உத்திகள் மற்றும் நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்புக்கு  பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். புது தில்லியில் இன்று 59-வது தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடப்பிரிவு பட்டதாரிகளிடையே‌ (2019 பிரிவு) அவர் உரையாற்றினார். எல்லைப் பிரச்சினைகள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளில் அரசின் துணிச்சலான அணுகுமுறை, அண்மைக்காலங்களில் இந்தியாவை வலிமைப்படுத்தி இருப்பதாகவும், தற்போது இந்தியாவிற்கு மிகப் பெரும் சர்வதேச பங்களிப்பும் பொறுப்பும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.