வெள்ளி, 22 அக்டோபர், 2021

நிலத்திற்காகவோ, வளத்திற்காகவோ, ஆதாரத்திற்காகவோ நடத்தப்படாத வெகு சிலப் போர்களில் 1971-ம் ஆண்டு போரும் ஒன்று.- திரு.ராஜ்நாத் சிங்


 நிலத்திற்காகவோ, வளத்திற்காகவோ, ஆதாரத்திற்காகவோ நடத்தப்படாத வெகு சிலப் போர்களில் 1971-ம் ஆண்டு போரும் ஒன்று என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

2021 அக்டோபர் 22 அன்று பெங்களூரு யெலஹங்கா விமான நிலையத்தில் இந்திய போர் வெற்றி பொன்விழா நினைவாக இந்திய விமானப்படை ஏற்பாடு செய்த மூன்று நாள் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய அவர், "மனிதாபிமானம் மற்றும் ஜனநாயகத்தின் கண்ணியத்தை பாதுகாப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது" என்று கூறினார்.

'ஒரு தேசத்தின் பிறப்பு: அரசியல்-ராணுவ எண்ணங்கள் மற்றும் குறிக்கோள்களின் ஒற்றுமை' என்ற கருத்தரங்கின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது என்று திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார், ஏனெனில் "முப்படைகளுக்கும் அரசிற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தான் நம் நாட்டின் வெற்றியை உறுதி செய்தது,” என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், நமது நாட்டின் அரசியல்-ராணுவ எண்ணங்களின் ஒற்றுமை ஆசியாவில் ஒரு புதிய தேசத்தை பிறப்பித்தது, சுரண்டல் மற்றும் அநீதியை தோற்கடித்து, நீதி இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்தது என்றார்.

அந்த நேரத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசிய திரு ராஜ்நாத் சிங், "இந்தப் போரில், கிழக்கு மற்றும் மேற்கு இரண்டு முக்கிய முனைகளாக இருந்தன என்று சொல்வது எளிது, ஆனால் உண்மையில் இதுபோன்ற பல முன்களங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது. அரசியல்-ராணுவ ஒருங்கிணைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை,” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக