வியாழன், 28 அக்டோபர், 2021

ஒளியை உறிஞ்சுவதன் மூலம் கரிவளியை (CO2) மீத்தேன் ஆக மாற்றுவதற்கு செலவு குறைந்த உலோகம் இல்லாத வினையூக்கியை இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.


 ஒளியை உறிஞ்சுவதன் மூலம் கரிவளியை (கார்பன் டை ஆக்சைடு) மீத்தேன் ஆக மாற்றுவதற்கு செலவு குறைந்த உலோகம் இல்லாத வினையூக்கியை இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

கரிவளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக ஆக்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் தற்போதைய ஆராய்ச்சிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களில் ஒன்றாக மீத்தேன் இருக்க முடியும். மேலும், தூய்மையான எரியும் புதைபடிவ எரிபொருளாக குறிப்பிடத்தக்க பயன்பாடுகளுடன் எரிபொருள் செல்களில் நேரடியாக அதைப் பயன்படுத்தப்படலாம். இயற்கை எரிவாயுவின் முக்கிய அங்கமாக உள்ள இது, மின்சார உற்பத்திக்கு நிலக்கரிக்கு மாற்றாக இருக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, உலோகம் இல்லாத நுண்துளை கரிம பாலிமரை வடிவமைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக