ஞாயிறு, 24 அக்டோபர், 2021

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் பிரிவு 4 நாள் பயணமாக இலங்கைச் செல்கிறது.


 இந்திய கடற்படையில் முதல் பயிற்சிப் பிரிவில் உள்ள இந்திய கடற்படைக் கப்பல்களான சுஜாதா, மகர், சர்துல், சுதர்ஷினி, தாரங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை அக்டோபர் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை இலங்கைக்கு 4 நாள் பயணம் மேற்கொள்கின்றன. வெளிநாட்டில் கடற்படை அதிகாரிகளின் 100 மற்றும் 101-வது ஒருங்கிணைந்த பயிற்சிக்காக இந்த கப்பல்கள் சென்றுள்ளன. 

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் சமூக-அரசியல் மற்றும் கடல்சார் அம்சங்களை தெரியப்படுத்துவதன் மூலம் இளம் அதிகாரிகளின் அனுபவங்களை விரிவுபடுத்துவதை  இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.  இதன் மூலம் வெளிநாடுகளுடன் நட்புறவு மேம்படும்.

இந்திய கடற்படையின் தெற்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா தலைமையில் இந்த கப்பல்கள் பயிற்சிக்கு செல்கின்றன.  வெளிநாடுகளைச் சேர்ந்த கடற்படையினருக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கடற்படை  பயிற்சி அளித்து வருகிறது.  தற்போதுவரை, இலங்கையைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள், இந்திய கடற்படையின் தெற்கு கட்டுப்பாட்டு மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த 4 நாள் இலங்கைப் பயணத்தில், இந்திய கடற்படையின் மகர் மற்றும் சர்துல் ஆகிய கப்பல்கள் 101-வது பயிற்சிப் பிரிவினருடன் கொழும்பு செல்கின்றன.  சுஜாதா, சுதர்ஷினி, தாராங்கினி மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக் கப்பல் விக்ரம் ஆகியவை 100-வது பயிற்சிப் பிரிவினருடன் திரிகோணமலை செல்கின்றன.  இருநாட்டு கடற்படைகளின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், பலவிதப் பயிற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன.   பயிற்சியில் ஈடுபடும் அவைருக்கும் இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன மற்றும் கொவிட்-19 பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக