சனி, 30 அக்டோபர், 2021

இந்திய கடற்படை போர்க்கப்பல் துஷில் ரஷ்யாவில் தொடக்கம்.


 பி 1135.6 வகையை சேர்ந்த ஏழாவது இந்திய கடற்படை போர்க்கப்பல், ரஷ்யாவில் உள்ள கலினின்கிராடில் அமைந்துள்ள யந்தர் கப்பல் தளத்தில் ரஷ்யாவுக்கான (மாஸ்கோ) இந்திய தூதர் திரு டி பால வெங்கடேஷ் வர்மா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

கப்பலுக்கு துஷில் என்று திருமதி டத்லா வித்யா வர்மா பெயரிட்டார். துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாப்பு கவசம் என்று பொருள்.

கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் இரண்டு கப்பல்களும் ரஷ்யாவில் இரண்டு 1135.6 கப்பல்களும் கட்டமைப்பதற்கான இந்திய குடியரசு மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டு கப்பல்கள் கட்டுவதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 18-ம் தேதி இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்தானது.

இந்திய கடற்படையின் தேவைகளுக்கேற்ப கட்டமைக்கப்படும் இக்கப்பல்களில் அதி நவீன வசதிகளும், ஆயுதங்களும் உள்ளன.

யந்தர் கப்பல் கட்டும் தளத்தின் இயக்குநர் ஜெனரல் திரு இல்யா சமரின், இந்திய அரசாங்கத்தின் தொடர் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். இந்திய தூதர் திரு டி பால வெங்கடேஷ் வர்மா, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பின் நீண்டகால பாரம்பரியத்தை எடுத்துரைத்தார். கொவிட்-19-ல் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டு ஒப்பந்த காலக்கெடுவின்படி கப்பல் தயாராவதை உறுதிசெய்ய யந்தர் கப்பல் கட்டும் தளம் மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக