செவ்வாய், 19 அக்டோபர், 2021

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்திய அரசு தூய்மைக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.-மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்


 இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் விதமாக விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு கொண்டாடும் வேளையில், நாட்டை தூய்மைப்படுத்துவதற்கு அக்டோபர் மாதத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தூய்மை மற்றும் சேவை இயக்கத்தை அரசு அலுவலகங்களுக்கு எடுத்து செல்லும் விதமாக, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று ஆய்வு செய்தார். அமைச்சகத்தில் பின்பற்றப்படும் வெளிப்புற மற்றும் டிஜிட்டல் தூய்மை நடைமுறைகளை அவர் மதிப்பாய்வு செய்தார்.

சிறந்த அலுவலக மேலாண்மைக்கு மின்-தாக்கல் முறையை அதிகளவில் பயன்படுத்துமாறு அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தினார்.

ஊழியர்களின் பணிச்சூழல், செயல்திறன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக வளாகம் மற்றும் டிஜிட்டல் தூய்மையின் முக்கியத்துவத்தை ஆய்வின் போது அமைச்சர் வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்திய அரசு தூய்மைக்கு அதிக முன்னுரிமை அளித்து வருவதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.

தொழில்நுட்பம் மற்றும் இணையத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், பழைய கோப்புகள் மற்றும் ஆவணங்களின் டிஜிட்டல் மயமாக்கலை விரைவான மற்றும் பாதுகாப்பான முறையில் செய்து, பூஜ்ஜிய காகித செயல்பாட்டை அடைய வேண்டும் என்றும் அமைச்சர் பரிந்துரைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக