ஞாயிறு, 17 அக்டோபர், 2021

பிரதமர் கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான் 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு வலுவூட்டும்.- திரு சர்பானந்தா சோனோவால்


 பிரதமர் கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான் 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு வலுவூட்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், சக்தி அன்னையை வழிபடும் மகாஷ்டமி புனித தினத்தன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ 100 டிரில்லியன் மதிப்பிலான மாபெரும் உள்கட்டமைப்பு முன்முயற்சியை தொடங்கி வைத்ததாகவும், அடுத்த 25 வருடங்களுக்கான நாட்டின் செயல்திட்டமாக இது இருக்கும் என்றும் கூறினார்.

இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய திரு சோனோவால், உள்கட்டமைப்பு திட்டங்களை சரியான முறையில் திட்டமிடுவதற்கும் சுமூகமாக நிறைவேற்றுவதற்கும் 16 அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடையே தடையின்மை மற்றும் ஒருங்கிணைப்பை கொண்டுவருவதே இதன் நோக்கம் என்று கூறினார்.

ரயில்வே, நெடுஞ்சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற முக்கிய மத்திய அரசு அமைச்சகங்கள் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

இந்த திட்டத்தின் சக்தி குறித்து மேலும் பேசிய திரு சோனோவால், "பெரிதாக திட்டமிடல் மற்றும் அதை களத்தில்  செயல்படுத்தலுக்கு இடையே எப்போதும் இடைவெளி உள்ளது. அதிகாரமட்ட சிக்கல்கள் மற்றும் அமைச்சகங்களுக்கிடையேயான குழப்பங்கள் காரணமாக, வேலைகள் தடைபடுவதோடு, அரசாங்கத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களை டிஜிட்டல் தளத்துடன் இந்த திட்டம் இணைக்கவுள்ளது. பல்முனை இணைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இத்திட்டத்தின் மூலம் செலவுகள் குறையும். முழுமையான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டுடன், விரைவான செயல்படுத்தல் நடைபெறும்,” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக