செவ்வாய், 19 அக்டோபர், 2021

காற்றின்தரம் குறித்த எச்சரிக்கை அமைப்பை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.


 நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ வாரத்தின் ஒரு பகுதியாக புவி அறிவியல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்ட மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், காற்றின் தரம் குறித்த விரைவு எச்சரிக்கை அமைப்பைத் தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், புவி அறிவியல் அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம், புதிய 'முடிவு ஆதரவு' அமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், தில்லி - தேசிய தலைநகர் பகுதியின் காற்றின் தரம் குறித்த முடிவுகளை எடுப்பதற்காக விரைவு எச்சரிக்கை அமைப்பின் திறனை மேம்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் சமீபத்தில் நிறுவப்பட்ட தேசிய தலைநகர் பகுதி மற்றும் அதைச் சுற்றி உளள பகுதிகளில் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தேவையை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முடிவு ஆதரவு அமைப்புக்காக இணையதளம் ஒன்றையும் ஐஐடிஎம் புனே சமீபத்தில் உருவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். https://ews.tropmet.res.in/dss/ என்பது அந்த இணையதளத்தின் முகவரியாகும்.  கணினிகளுக்காக தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், கைபேசிகளிலும் சிறப்பாக இயங்கும் வகையில் விரைவில் வடிவமைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக