திங்கள், 18 அக்டோபர், 2021

வடகிழக்கு இந்தியாவில் விமான தொடர்பு விரிவாக்கத்திற்கான 6 வழித்தடங்களை விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைத்தார்


 வடகிழக்கு  இந்தியாவில் விமான தொடர்பு விரிவாக்கத்திற்கான 6 வழித்தடங்களை மத்திய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா, இத்துறை இணை அமைச்சர் ஜெனரல் டாக்டர் வி கே சிங் (ஓய்வு),  விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சக செயலாளர் திரு ராஜீவ் பன்சால் ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

கொல்கத்தா- குவஹாத்தி- ஐசால், ஐசால் – ஷில்லாங், ஷில்லாங் – ஐசால், ஐசால் – குவஹாத்தி, குவஹாத்தி – கொல்கத்தா ஆகிய வழித்தடங்களில் இன்று  விமானப் போக்குவரத்து தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா கூறுகையில், கடந்த 2014ஆம் ஆண்டு வடகிழக்குப் பகுதியில் 6 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. உடான் திட்டத்தின் கீழ்  7 ஆண்டு குறுகிய காலத்தில் 15 விமான நிலையங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இத்துடன் கிருஷி உடான் திட்டத்தின் கீழ், இப்பகுதியில் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க 16 விமான நிலையங்களை அடையாளம் கண்டுள்ளோம். இதன் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக