வெள்ளி, 29 அக்டோபர், 2021

ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான மனிதர்களுடன் கூடிய சமுத்ரயான்-ஐ மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் தொடங்கி வைத்தார்


 மத்திய அறிவியல் தொழில்நுட்பம் & புவி அறிவியல் துறை (தனிப்பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கி ஆய்வுக் கலத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த ஆய்வுக்கலம் அனுப்பப்படுவதன் மூலம் கடலடி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நீர்மூழ்கி கலத்தைப் பெற்றுள்ள அமெரிக்கா. ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த முக்கிய தொழில்நுட்பம், ஆழ்கடலில் 1000 முதல் 5500 மீட்டர் ஆழம் வரை உள்ள பகுதிகளில், உயிரினம் அல்லாத பாலி மெட்டாலிக் மாங்கனீஸ், கேஸ் ஹைட்ரேட்டுகள், ஹைட்ரோ-தெர்மல் சல்பைடுகள் மற்றும் கோபால்ட் போன்ற தாது வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய புவி அறிவியல் துறைக்கு உதவிகரமாக இருக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கி கலமான மத்சியா 6000 –ஐ வடிவமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் நிறைவடைந்து, இஸ்ரோ, சென்னை ஐஐடி மற்றும் டிஆர்டிஓ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட அந்த கலத்தின் செயல்பாடு தொடங்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் மனிதருடன் கூடிய இந்த நீர்மூழ்கி கலன் 500 மீட்டர் வரையிலான ஆழமற்ற பகுதியில் கடலடி ஆராய்ச்சி ஒத்திகையை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர், மத்சியா 6000 எனப்படும் மனிதருடன் கூடிய ஆழ்கடல் நீர்மூழ்கி கலன், 2024 ஆம் ஆண்டின் 2-வது காலாண்டில் ஒத்திகையை மேற்கொள்ள தயாராக இருக்கும் என்றும் தெரிவித்தார். உலோகவியல், எரிசக்தி சேமிப்பு, கடலடி பயணம் மற்றும் உற்பத்தி வசதிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதுடன் மேலும் திறமையான, நம்பகமான, பாதுகாப்பான, மனிதருடன் கூடிய நீர்மூழ்கி கலனை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடலடியியல் உயர் பகுப்பாய்வு, உயிரி – பன்முக மதிப்பீடு, புவி-அறிவியல் கூர்நோக்கு, தேடுதல் பணிகள் மற்றும் பொறியியல் ஒத்துழைப்பு போன்ற கடலியல் துணை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இது போன்ற நீருக்கு அடியில் இயங்கக் கூடிய கலங்கள் அவசியம் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஆளில்லா கடலடி ஆய்வுக்கலன்கள் மேம்பட்ட முயற்சிகள் மற்றும் தலை சிறந்த பார்வை அமைப்புகளை ஒத்த நேரடி கண்காணிப்பு, மனிதருடன் நீருக்கடியில் செல்லக் கூடிய உணர்வை ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தக் கூடியதாகவும், மேம்பட்ட தலையீட்டுத் திறன் உடையதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அதிநவீன கடலியல் துணை தொழில்நுட்பங்களுடன் கூடிய சீனாவால் 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போராளி (Fendouzhe) எனப்படும் மனிதருடன் கூடிய நீர்மூழ்கிக் கலன் 11,000 மீட்டர் ஆழத்தை சமீபத்தில் தொட்டியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

20 ஆண்டுகளில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், ஆளில்லா ரோபோ கலன்கள் உருவாக்கப்பட்டது மற்றும் 6000 மீட்டர் செயல் திறன் கொண்ட அமைப்புகள் குறித்தும் மத்திய புவி அறிவியல் துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். இத்துறையின் தேசிய கடலியல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT)  மனிதருடன் 6000 மீட்டர் ஆழம் வரை சென்று ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய நீர்மூழ்கி கலனை உள்நாட்டிலேயே வடிவமைத்துள்ளனர். மனிதருடன் கூடிய நீர்மூழ்கிக் கலன் 3 நபர்களை 2.1 மீட்டர் விட்டம் கொண்ட டைட்டானியத்தாலான கோள வடிவிலான கலன் 12 மணி நேர வரை செயல்படும் திறன் கொண்டதாக இருப்பதுடன் அவசர நேரத்தில் 96 மணி நேரம் வரை உதவி அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

மனிதருடன் கூடிய நீர்மூழ்கி சாதனத்தின் சிக்கலான துணைக் கலன்களும் டைட்டானியம் உலோகக் கலவையால் ஆனபணியாளர் கோளம், மனித ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு இணைக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு அமைப்பு, குறைந்த அடர்த்தி மிதவை கலன், நிலைப்படுத்தும் சாதனம் மற்றும் ட்ரிம் அமைப்பு போன்றவற்றை கொண்டதாகும். அழுத்தம் ஈடுகட்டப்பட்ட பேட்டரிகள் மற்றும் உந்து சாதனங்கள், கட்டுப்பாட்டு மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் செலுத்துதல் மற்றும் மீட்பு சாதனங்களும் இதில் அடக்கம்.

6000 மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடிய மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கிக் கலனுக்கான சாதன வடிவமைப்பு, இயக்கக் கோட்பாடு, துணை சாதனங்கள் செயல்பாடு மற்றும் ஒருமைப்பாடு, அவசரகால மீட்பு, செயல்பாட்டு தோல்வி, பகுப்பாய்வு போன்றவை ஆய்வு செய்யப்பட்டு, வகைப்பாடு மற்றும் சான்றளிப்பு அமைப்பின் சர்வதேச சங்க விதிமுறைகளின்படி சான்றளிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக