செவ்வாய், 26 அக்டோபர், 2021

உதான் திட்டத்தின் கீழ் ஷில்லாங் – திப்ருகர் வழித்தடத்தில் முதல் நேரடி விமானத்தை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைத்தார்


ஷில்லாங் – திப்ருகர்   இடையே முதல் நேரடி விமானப் போக்குவரத்தை மத்திய விமானப் போக்குவர்த்துத் துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங், இத்துறை செயலாளர் ராஜீவ் பன்சால், மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஜோதிராத்திய சிந்தியா, ‘உலகிலேயே மிக உயரமான பகுதிகளில் ஷில்லாங்கும் ஒன்று. இது கிழக்குப் பகுதியின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுகிறது.  உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை இது ஈர்க்கிறது’ என்றார். 

கடந்த 2014-ஆம் ஆண்டு வடகிழக்குப் பகுதியில் 6 விமான நிலையங்கள் மட்டுமே இருந்ததாகவும் தற்போது இந்த  எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என அவர் கூறினார். ஷில்லாங் முதல் திப்ருகர் வரை சாலை  மற்றும் ரயில்  மூலம் செல்ல 12 மணி நேரமாகும். இந்த நேரடி பயணிகள் விமானம்  அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் இந்தப் பயண நேரம் 75 நிமிடங்களாக குறைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக