ஜோதிராதித்ய சிந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிராதித்ய சிந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூன், 2022

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்கீழ் 'குறைந்தபட்ச ஆட்சி, அதிகபட்ச நிர்வாகம்' என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். - திரு.ஜோதிர் ஆதித்ய எம்.சிந்தியா


 மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஜோதிர் ஆதித்ய எம்.சிந்தியா, IoTechWorld Avigation Pvt Ltd-க்கு, ட்ரோன் விதிகள் 2021-ன்கீழ், முதல் தகுதிச் சான்றிதழை வழங்கினார். 2017-ம் ஆண்டில் குருகிராமில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவில், விவசாயத்துறைக்கு உதவி செய்யும் ட்ரோன்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது.

IoTechWorld சான்றிதழுக்கான விண்ணப்பத்தை விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இணையதளத்தில் 2022 மே 11-ம் தேதி சமர்ப்பித்த நிலையில், 34 நாட்களுக்குள் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  ட்ரோன் விதிகள் 2021, இந்திய தர கவுன்சில் அல்லது சான்றிதழ் வழங்கும் அமைப்புகளுக்கு சான்றிதழ் வழங்க 60 நாட்களும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு 15 நாட்களும் என மொத்தம் 75 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இருந்தபோதிலும், தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டதால், 60 நாட்களில் தகுதிச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

புதன், 8 ஜூன், 2022

தேசிய வான் விளையாட்டுகள் கொள்கையை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா வெளியிட்டார்.


 தேசிய வான் விளையாட்டுகள் கொள்கையை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா இன்று  வெளியிட்டார்.  2030க்குள் பாதுகாப்பான, குறைந்த செலவிலான, எளிதில் பெறக்கூடிய, ரசிக்கத்தக்க, நீடிக்கவல்ல, வான்விளையாட்டுகள் சூழலை இந்தியாவில் உருவாக்குவது இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

வெள்ளி, 12 நவம்பர், 2021

விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்தில் மின்னணு நிர்வாக தளத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


 விடுதலையின் வைர விழாவை நாடு கொண்டாடும் வேளையில், விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்தில் மின்னணு நிர்வாக தளத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  இந்நிகழ்ச்சியில், விமான போக்குவரத்து துறை செயலாளர் திரு ராஜீவ் பன்சால், விமான போக்குவரத்து துறை தலைமை இயக்குனர் திரு அருண் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியல் அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசியதாவது:

பிரதமர் திரு நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கை பின்பற்றி, விமான போக்குவரத்து துறை தலைமை இயக்குனரகம் மின்னணு-நிர்வாக தளத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் விமான போக்குவரத்து துறை இயக்குரகத்தின் 70 சதவீத பணிகள் மற்றும் செயல்பாடுகள்,  அதாவது 99 சேவைகள் முதல் கட்டமாக தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டங்களில் 198 சேவைகள் தானியங்கிமயமாக்கப்படும். இந்த ஒற்றை சாளர முறையிலான மின்னணு தளம் செயல்பாட்டு திறன் குறைபாடுகளை குறைத்து மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நபர்களின் தலையீடு குறைக்கப்படும். வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாடு மேம்படும். கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையிலிருந்து ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கு ஒரு முன்னுதாரண மாற்றத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இதற்காக விமான போக்குவரத்து தலைமை இயக்குரகத்துக்கு பாராட்டுக்கள். இந்த மின்னணு நிர்வாக முறை மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவது குறித்து ஆய்வு செய்யப்படும். அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும்.

செவ்வாய், 26 அக்டோபர், 2021

உதான் திட்டத்தின் கீழ் ஷில்லாங் – திப்ருகர் வழித்தடத்தில் முதல் நேரடி விமானத்தை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைத்தார்


ஷில்லாங் – திப்ருகர்   இடையே முதல் நேரடி விமானப் போக்குவரத்தை மத்திய விமானப் போக்குவர்த்துத் துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங், இத்துறை செயலாளர் ராஜீவ் பன்சால், மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஜோதிராத்திய சிந்தியா, ‘உலகிலேயே மிக உயரமான பகுதிகளில் ஷில்லாங்கும் ஒன்று. இது கிழக்குப் பகுதியின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுகிறது.  உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை இது ஈர்க்கிறது’ என்றார். 

வியாழன், 16 செப்டம்பர், 2021

தற்போது வரை 302 விமானங்கள் வாயிலாக 10 நகரங்களுடன் விசாகப்பட்டினம் இணைக்கப்பட்டுள்ளது. - திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா


 மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.  சிந்தியா, இணை அமைச்சர் ஜெனரல் டாக்டர் வி.கே. சிங் (ஓய்வு), செயலாளர் திரு பிரதீப் கரோலா ஆகியோர் விசாகபட்டினம் (ஆந்திரப் பிரதேசம்), மும்பை (மகாராஷ்டிரா) இடையேயான முதல் ஸ்பைஸ்ஜெட் விமான சேவையை இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் திரு வசுபள்ளி கணேஷ் குமார் விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வியாழன், 2 செப்டம்பர், 2021

விமான நிலையங்களில் பிராந்திய விமான போக்குவரத்தை மேம்படுத்த உடான் திட்டத்தை, விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.


 விமான போக்குவரத்து உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த, நேரடியாக தலையிடும்படி தெலங்கானா மற்றும் மேகாலயா முதல்வர்களுக்கு மத்திய  விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிர்ஆதித்யா சிந்தியா கடிதம் எழுதியுள்ளார். 

புதன், 1 செப்டம்பர், 2021

“அனைவரும் பறப்போம், அனைவரும் இணைவோம்" என்ற மத்திய அரசின் முன்முயற்சியின் முக்கிய நோக்கங்களுக்கு இணங்க நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.- திரு ஜோதிராதித்ய சிந்தியா


 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான இணைப்பை வலுப்படுத்தும் வகையில்  2 விமானங்களின் சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா, இணை அமைச்சர் ஜெனரல் டாக்டர் வி கே சிங் (ஓய்வு) மற்றும் செயலாளர் திரு பிரதீப் கரோலா ஆகியோர் காணொலி வாயிலாகக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்கள். இதன் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர்- இந்தூர்- தில்லி வழித்தடத்தில் இண்டிகோ நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தூர் முதல் துபாய் வரையிலான ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சனி, 21 ஆகஸ்ட், 2021

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சாதாரண மக்களின் எட்டா கனவாக இருந்த விமானப் பயணம் தற்போது அனைவருக்கும் சாத்தியமாகி வருகிறது.- திரு ஜோதிராதித்ய சிந்தியா


 ஜபல்பூர்-தில்லி வழித்தடத்தில் இண்டிகோ விமானங்களின் சேவையை மத்திய சிவில்  விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி கே சிங் (ஓய்வு) ஆகியோர் சிவில்  விமான போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு பிரதீப் கரோலாவுடன் இணைந்து காணொலி மூலம் துவக்கி வைத்தனர்.