வெள்ளி, 29 அக்டோபர், 2021

மத்திய தொகுப்புப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய விகிதம் மாற்றம்


 மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை மாற்றியமைத்து, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுகள் 01.10.2021 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வு மூலம் நாடு முழுவதும் சாலைக் கட்டுமானப் பணி, விமான ஓடுதள கட்டுமானப் பணி மற்றும் கட்டிடப் பணிகள், துப்புரவு பணிகள், சுமை ஏற்றி இறக்குதல், காவலர் போன்ற பணியாற்றும் சுமார் 1.5 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள் என மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

“அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம் அனைவரும் முயற்சிப்போம்” என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தேச நிர்மாணத்திற்காக பாடுபடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தமது தீபாவளி நல்வாழ்த்துகளையும் திரு.பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக