செவ்வாய், 19 அக்டோபர், 2021

தூய்மை என்பது நமது இயல்பிலும் கலாச்சாரத்திலும் இருக்க வேண்டும். பிரதமர் திரு நரேந்திர மோடி தூய்மைக்கான தேசிய விழிப்புணர்வை உருவாக்கியுள்ளார்.- திரு நரேந்திர சிங் தோமர்


 தூய்மை இயக்கத்தின் கீழ், கிரிஷி பவனை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் ஆய்வு செய்தார்.

கிரிஷி பவனில் அமைந்துள்ள அனைத்து அமைச்சகங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பில், பல்வேறு அலுவலகங்களின் நிலுவையில் உள்ள வழக்குகளைக் களைவதுக் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

"தூய்மை என்பது நமது இயல்பிலும் கலாச்சாரத்திலும் இருக்க வேண்டும். பிரதமர் திரு நரேந்திர மோடி தூய்மைக்கான தேசிய விழிப்புணர்வை உருவாக்கியுள்ளார், இதன் விளைவாக தூய்மைக் குறித்த விழிப்புணர்வு பரவலாகப் பரவுவதைக் காணலாம்." என்று திரு தோமர் கூறினார்.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி மற்றும் வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் ஆகியோருடன், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு விநியோகம், கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு மற்றும் பிற அமைச்சகங்கள்/துறைகளின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். .

“அனைத்து கட்டிடங்கள் மற்றும் அலுவலக வளாகங்களிலும் தூய்மைப் பின்பற்றப்பட வேண்டும் என்று தூய்மை இயக்கத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம். தூய்மையின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்,”  என்று திரு தோமர் கூறினார்.

பொதுமக்கள் குறைகள், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் அலுவலகங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள விஷயங்களை அனைத்துத் துறைகளின் அதிகாரிகளுக்கும் விரைவில் தீர்க்க வேண்டும் என்று திரு தோமர் அறிவுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக