சனி, 16 அக்டோபர், 2021

உலகத்துக்கு, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் முன்மாதிரியாக திகழ்ந்தார். அவர் தீவிர முஸ்லிம், ஆனாலும் ஆழ்ந்த ஆன்மீகவாதியாக இருந்து, மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்திசைவை ஊக்குவித்தார்.- திரு ஹர்தீப் சிங் பூரி


 டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பற்றிய 3வது நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை  அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

டாக்டர் அப்துல்கலாம் இந்தியாவின் சிறந்த நபராக திகழ்ந்தார். அவரால் பல்வேறு மரபுகள் மற்றும் ஒழுங்குகளை வெற்றிகரமாக ஒன்றிணைக்க முடிந்தது. அவர் எங்கு சென்றாலும், யாரை சந்தித்தாலும், அவர் நம்பிக்கையையும், நேர்மறையையும் வெளிப்படுத்தினார்.  இன்றைய அவநம்பிக்கையான சூழலில், நாம் டாக்டர் கலாமை பற்றி நினைப்பது நல்லது. பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு டாக்டர் கலாம், அறிவியல் ஆலோசகராக இருந்தபோது, நான் அத்துறையில் இணை செயலாளராக இருந்தேன். அப்போது அவருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

நாட்டின் பாதுகாப்புத்துறையின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார். நாட்டின் ஏவுகணை திட்டத்தை முன்னெடுத்து சென்றார். பல சாதனைகளை படைத்தார். ஆனாலும், பன்முகத்தன்மை மற்றும் ஒத்துழைப்பின் லட்சியங்களை டாக்டர் அப்துல் கலாம் வெளிப்படுத்தினார்.  

டாக்டர் கலாம் அடக்கமான மனிதர். அவரது துறையில் அவர் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்தார். அவை 21ம் நூற்றாண்டில், இந்தியாவின் பாதையை வகுக்க உதவியது. அதேநேரத்தில் அவரது நேர்மை, புத்திசாலித்தனம் மற்றும் வசீகரம் பல இந்தியர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் கவர்ந்தது. அவர் அனைவரின் பாராட்டு, மரியாதை, மற்றும் அன்பை பெற்றார். அது இன்றும் தொடர்கிறது.

உலகத்துக்கு, டாக்டர் கலாம் முன்மாதிரியாக திகழ்ந்தார். அவர்  தீவிர முஸ்லிம், ஆனாலும் ஆழ்ந்த ஆன்மீகவாதியாக இருந்து, மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்திசைவை ஊக்குவித்தார்.

அவர் தொலைநோக்கு விஞ்ஞானியாக திகழந்தார். நவீன செயற்கைகோள் தொழில்நுட்பத்தை அவர் உருவாக்கினார். இந்தியாவின் ஏவுகணை மனிதராகவும் அவர் திகழ்ந்து, இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தினார். ஆனாலும், அமைதியை மேம்படுத்துவதற்காக, அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.  அவர் மக்களின் குடியரசுத் தலைவராக திகழ்ந்தார். இந்தியா முதலில் மற்றும் சிறந்த உலகுக்குக்கான அவரது அர்ப்பணிப்பு மூலம், மக்கள் மனதில் அழியாத முத்திரை பதித்தார்.   

‘என்னால் என்ன வழங்க முடியும்’ என அவரது இயக்கம் மூலம் நாட்டுக்கான சேவையை நோக்கி, லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அவர் ஊக்குவித்தார்.  நமது பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த, உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும், தற்சார்புடன் திகழவும், அவர் தீவிரமாக ஆதரவளித்தார்.  பாதுகாப்பு தளவாட இறக்குமதியை குறைப்பதில், அவர் முக்கிய பங்காற்றினார்.  பலவழிகளில் அவர் தற்சார்பு பாதையை ஆதரித்தார். அதைத்தான் நாம் தற்போது பின்பற்றுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக