ஹர்தீப் சிங் பூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹர்தீப் சிங் பூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 அக்டோபர், 2021

உலகத்துக்கு, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் முன்மாதிரியாக திகழ்ந்தார். அவர் தீவிர முஸ்லிம், ஆனாலும் ஆழ்ந்த ஆன்மீகவாதியாக இருந்து, மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்திசைவை ஊக்குவித்தார்.- திரு ஹர்தீப் சிங் பூரி


 டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பற்றிய 3வது நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை  அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

டாக்டர் அப்துல்கலாம் இந்தியாவின் சிறந்த நபராக திகழ்ந்தார். அவரால் பல்வேறு மரபுகள் மற்றும் ஒழுங்குகளை வெற்றிகரமாக ஒன்றிணைக்க முடிந்தது. அவர் எங்கு சென்றாலும், யாரை சந்தித்தாலும், அவர் நம்பிக்கையையும், நேர்மறையையும் வெளிப்படுத்தினார்.  இன்றைய அவநம்பிக்கையான சூழலில், நாம் டாக்டர் கலாமை பற்றி நினைப்பது நல்லது. பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு டாக்டர் கலாம், அறிவியல் ஆலோசகராக இருந்தபோது, நான் அத்துறையில் இணை செயலாளராக இருந்தேன். அப்போது அவருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான தொலை நோக்கு திட்டத்தின் கீழ், நகர்ப்புறமயமாக்கல் நோக்கிய அணுகுமுறையில் முன்னுதாரண மாற்றம் ஏற்பட்டுள்ளது.- திரு ஹர்தீப் சிங் பூரி


 மைசூர் சாலை முதல் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையம் வரை, 7.5 கி.மீ தூர, மெட்ரோ ரயில் பாதை திட்டத்தை கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை முன்னிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு நம்ம மெட்ரோ 2வது திட்டத்தின் கீழ், மேற்கு விரிவாக்க திட்டம், மைசூர் சாலை முதல் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையம் வரை, 7.5 கி.மீ  தூரத்துக்கு அமைக்கப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பேசியதாவது:

சனி, 18 ஜூலை, 2020

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் சொத்துவரி குறித்து 15வது நிதி ஆணையம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் சொத்துவரி குறித்து 15வது நிதி ஆணையம், இன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துடன் பேச்சு நடத்தியது

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் சொத்துவரி உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங்பூரி மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் 15வது நிதிஆணையத்தினர் சந்தித்துப் பேசினர். நிதிஆணையம் 2020- 21ஆம் ஆண்டுக்கான பரிந்துரைகளை அளித்திருந்தது. இந்தப் பரிந்துரையின்படி, அனைத்து மாநிலங்களும் வரிகளின் விவரங்களை அறிவிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு மாநிலத்தின் மாநில ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சிக்கேற்ப சொத்து வரி வசூலிப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது 

சனி, 20 ஜூன், 2020

பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண்கடன் வசதி திட்டம் துவக்கம். தற்சார்பு இந்தியாவிற்கான முயற்சி - ஹர்தீப் எஸ் பூரி


தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண்கடன் வசதி திட்டம் துவக்கம். தற்சார்பு இந்தியாவிற்கான முயற்சி

பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி (பிரதமர் ஸ்வநிதி) திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்காக - இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமையாக இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) நியமிக்கப்பட்டுள்ளது.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று புது தில்லியில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) ஆகியவை கையெழுத்திட்டன. அமைச்சகத்தின் சார்பில் அமைச்சகத்தின் துணைச் செயலர் திரு சஞ்சய்குமார், சிட்பியின் துணை நிர்வாக இயக்குனர் திரு. வி.சத்திய வெங்கட்ராவ், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கான இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் எஸ் பூரியின் முன்னிலையில் கையெழுத்திட்டனர். 

வெள்ளி, 15 மே, 2020

உதான் விமானங்களை இயக்கி சேவை புரிந்த கொரோனா போர் வீரர்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.


உயிர்காக்கும் உதான் விமானங்கள் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் சுமந்து வருகின்றன – 518 உதான் விமானங்கள் 875 டன் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளன

ஊரடங்கு காலமான மார்ச் 26ஆம் தேதியில் இருந்து இன்று வரை 518 உயிர்காக்கும் உதான் விமானங்கள் 875 டன் உயிர்காக்கும் மருத்துவப் பொருள்களை தேவைப்படும் இடங்களுக்கு 4,92,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.  அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை ஏற்றிச் செல்லும் உயிர்காக்கும் உதான் விமானங்களை இயக்கி சேவை புரிந்த கொரோனா போர் வீரர்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

கோவிட்-19 காரணமாக நம்நாட்டில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடையில் மருந்துகள் உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்தைப் பெரிதும் பாதித்தது.  சாலை மற்றும் ரெயில் போக்குவரத்திற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  அத்தகைய நெருக்கடியான சூழலில் உயிர்காக்கும் உதான் விமானச் சேவையானது விரைவாக மருந்துப் பொருள்களை ஏற்றிச்சென்று உயிர்களைக் காப்பாற்றியது. இந்தச் சரக்கு விமானங்கள் மருந்துகளை மட்டும் ஏற்றிச் செல்லவில்லை.  விரைவில் அழுகக்கூடிய காய்கறிகளைக் கூட வெளிநாடுகளுக்கு இந்த விமானங்கள் ஏற்றிச் சென்றுள்ளன.  இத்தகைய சேவையானது ஏற்றுமதியாளர்களுக்குப் பெருமளவில் உதவியாக இருந்தது.  இந்த விமான சரக்குப் போக்குவரத்தில் தனிநபர் பாதுகாப்பு உபகரணம் (PPE), முகக்கவசங்கள் மற்றும் விரைவில் சென்று சேர வேண்டிய இதர அத்தியாவசியப் பொருள்களும் உள்ளடங்கும்.  சென்னைக்கும், சூரத்திற்கும் இடையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர வர்த்தக சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு தனியார் விமான நிறுவனம் ஒன்று சரக்கு விமானங்களை இயக்கியது.  பாதுகாப்பு முகக்கவசங்கள் மற்றும் கோவிட்-19 உடன் தொடர்புடைய இதர பொருள்கள் வான்வழியாக விரைவில் எடுத்துச் செல்லப்பட்டன.